போடி அருகே அத்தியூத்து வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு
போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், குரங்கணி , போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் அதில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விட்ட நிலையில், நேற்று நள்ளிரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், வடக்கு மலை, குரங்கணி, போடி மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் அதிக கன மழை பெய்தன.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறதா? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
மழையின் காரணமாக போடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கொழுக்குமலை எஸ்டேட் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தோட்ட பராமரிப்பில் இருந்த பத்துக்கு மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் இன்று காலை தீயணைப்புத்துறை மீட்பு படையினரும் காவல்துறையினர் வருவாய் துறையினர் வனத்துறையினர் சம்பவத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜெயபிரகாஷ் (50) இவரது மனைவி ரஞ்சிதம் (45) ராஜேந்திரன் ( 55) இவரது மனைவி லட்சுமி (50), ராஜா (55) மனைவி வனம் (40) மற்றும் ஐந்துக்கு மேற்பட்ட குழந்தைகள் வெள்ளத்தில் மாட்டி சிக்கித் தவித்தனர். இரவு முழுவதும் காற்றாற்று வெள்ளத்தை சிக்கிய நிலையில் இன்று காலை சென்ற மீட்பு படையினர் இவர்களை உயிருடன் மீட்டனர்.
போட்டா போட்டி போடும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்! மக்கள் சாய்ஸில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா?
தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு உள்ள நிலையில், கயிறுகள் மூலம் அவர்களை உயிருடன் மீட்டனர். மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை உள்ள நிலையில் இப்பகுதிக்கு விவசாயகூலித்தொழில் செய்ய தொழிலாளர்களை வர வேண்டாம் என வனத்துறையினரும் வருவாய் துறை காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். தரைப்பகுதியில் மட்டும் வேலைக்கு செல்லுமாறும் மலைப்பகுதிகளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.