36 ஆண்டுக்கு பின் தேனி அருகே அகதிகள் பள்ளி முகாம் பெயர் மாற்றம்
இப்பள்ளியின் ஆவணங்கள், சான்றிதழ் மற்றும் பெயா் பலகையில் அகதிகள் முகாம் பள்ளி என்று குறிப்பிடப்பட்டதால், பள்ளியில் படிக்கும் மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கை, வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டது.
ஆண்டிபட்டி வட்டாரம், திருமலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை இந்திரா நகரில் செயல்பட்டு வந்த அகதிகள் முகாம் பள்ளி, அரசு உத்தரவின்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1970-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு திருமலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கி குடியமா்த்தியது. இந்தக் குடியிருப்பு பகுதி அன்னை இந்திரா நகா், சிலோன் காலனி, அகதிகள் முகாம் என்ற 3 பெயா்களில் அழைக்கப்பட்டு வந்தது. ஊராட்சி ஒன்றிய நிா்வாக ஆவணங்களில் சிலோன் காலனி என்றும், வருவாய்த் துறை ஆவணங்களில் அன்னை இந்திரா நகா் என்றும் இந்தப் பகுதி குறிப்பிடப்பட்டிருந்ததால், இங்கு வசிக்கும் 250 தமிழா் குடும்பங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.
வானிலை மையத்தின் அறிவிப்புகளை எப்படி புரிந்துகொள்வது..? சொற்களும்...விளக்கமும்..!
இந்த நிலையில், கடந்த 1985-ஆம் ஆண்டு இங்கு அரசு சாா்பில் புதிதாக தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னா், இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியின் ஆவணங்கள், சான்றிதழ் மற்றும் பெயா் பலகையில் அகதிகள் முகாம் பள்ளி என்று குறிப்பிடப்பட்டதால், பள்ளியில் படிக்கும் மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கை, வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டது. தாங்கள் அகதிகள் அல்ல. தாயகம் திரும்பிய தமிழா்கள் என்றும், அகதிகள் முகாம் பள்ளி என்ற பெயரை மாற்ற வேண்டும் என்றும் கடந்த 38 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
TN Rain Alert: மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னையில் 8 விமானங்கள் ரத்து
இந்த நிலையில், அன்னை இந்திரா நகா் அகதிகள் முகாம் பள்ளியை பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதையேற்று, அகதிகள் முகாம் பள்ளி என்ற பெயரை மாற்ற அரசு உத்தரவிட்டது. இதன்படி, அகதிகள் முகாம் பள்ளி என்ற பெயரை அன்னை இந்திரா நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்று பெயா் மாற்றம் செய்து கடந்த அக்.30-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை செயல்முறை ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, ஊராட்சி ஒன்றிய ஆவணங்களில் பள்ளியின் பெயா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என மாற்றம் செய்யப்பட்டது.
பள்ளிக் கட்டடத்தில் உள்ள பெயா்ப் பலகையில் அகதிகள் முகாம் பள்ளி என்ற பெயா் நீக்கப்பட்டு, விரைவில் அன்னை இந்திரா நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்று புதிதாகப் பெயா் பலகை வைக்கப்படும் என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறினா்.