Theni : விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு; 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
தேனி மாவட்டத்தை சேர்ந்த காவலர் விடுமுறைக்காக வீட்டில் இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
தேனி: மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த காவல் ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கம்பர் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர் நடேசன் (49). இவர் கோவை பீளமேடு இ2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சக்தி என்ற மனைவியும் இரண்டு மருத்துவம் பயிலும் மகள்களும் உள்ளனர். இவர் கோவையில் குடியிருந்து வந்த சூழலில் இவரது சொந்த ஊரான சீலையம்பட்டி பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் காவல் ஆய்வாளர் நடேசன் விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் புதிதாக கட்டி வரும் வீட்டினை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊரில் இறுதி அஞ்சலி
இதனை அடுத்து சிகிச்சைக்காக உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் நடேசன் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது சொந்த ஊரான சீலையம்பட்டியில் உள்ள வீட்டில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. மேலும் அவரது உடலுக்கு இன்று கோவை காவல்துறை சரக உயர் அதிகாரிகள் தேனி மாவட்ட உயர் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவல் அதிகாரிகள் காவல்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி சென்றனர்.
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
தொடர்ந்து பணிக்காலத்தின் போது இன்ஸ்பெக்டர் நடேசன் உயிரிழந்த காரணத்தினால் அவரது உடல் காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மதியம் அவரது வீட்டில் முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு காவல்துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக அருகே உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காவல் ஆய்வாளர் நடேசனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவரது குடும்ப வழக்கப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பணிக்காலத்தில் இருந்த போது காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.