Theni: கண்ணகி கோயில் காணிக்கை பணம் பறக்கும் படையினரால் பறிமுதல்
சித்ரா பௌர்ணமி விழா காணிக்கை ரூ.96 ஆயிரம் தனியார் வாகனத்தில் கொண்டு வந்தபோது பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழாவில் பச்சைப்பட்டு உடுத்தி அருள்பாலித்த கண்ணகி தேவியை தமிழக-கேரள மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி முழு தேர்வு அட்டவணை இதோ!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதே போன்றும் இந்த ஆண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட நிர்வாகமும் கேரளாவின் சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினரும் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Nitin Gadkari: தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.. என்னாச்சு?
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் (26.04.2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் தமிழக எல்லை குமுளிமலைச்சாலை (லோயர்கேம்ப்) பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பரமசிவம், கார்த்திக் ராஜா குழுவினர், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை செய்தனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வந்த கேரளப் பதிவை கொண்ட பொலிரோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த கண்ணகி கோவில் பூஜை பொருள்கள் உள்ளிட்ட கோவில் பொருட்களை எடுத்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பஞ்சுராஜா என்பவரிடமிருந்து ஒரு சாக்கு பையில் சில்லறை நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் என ரூ 96885-ஐ எவ்வித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வந்ததாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் நேற்று சித்திரை முழு நிலவு விழாவில் கண்ணகி கோயிலில் பூசாரி தட்டில் போட்ட பக்தர்கள் காணிக்கையாக போடப்பட்ட பணம் என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் உத்தமபாளையம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.