மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

லோயர்கேம்பிலிருந்து ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு குடி நீர் கொண்டு செல்லும் கூட்டு குடி நீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மக்களின் குடி நீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சார்பில்  முல்லை பெரியாற்றில் இருந்து 1,295 கோடி ருபாய் செலவில் ராட்சத குழாய் மூலம் கூட்டு குடி நீர் திட்டத்தால் தண்ணீரை மதுரைக்கு நேரடியாக எடுத்து செல்ல அதிமுக ஆட்சியின் போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம்  தமிழக,கேரள எல்லையை இணைக்கும் பகுதியான லோயர்கேம்பில் இருந்து முல்லை பெரியாறு அணையின் மூலம் தமிழகத்திற்கு வைகை அணைக்கு தினந்தோறும் மதுரை மக்களின் குடிநீருக்கு அனுப்பபடும்  நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

இன்னிலையில் முல்லை பெரியாறு அணையின் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து 125 MLD குடிநீர் குழாய் மூலம் மதுரைக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மதுரையில் அதிமுக ஆட்சியில் முன்னால் முதல்வர் பழனிச்சாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்களிடையே அப்போதிருந்தே கடும் எதிர்ப்பு எழுந்தது. மதுரைக்கு குடி நீர் வழக்கமாக முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் சென்றடைந்து வைகை அணையிலிருந்து  நீர் திட்டம் 1 மற்றும் 2 இதன் மூலம்  அணையில் இருந்து தினந்தோறும் 47 கன அடி வீதம்  நாள் ஒன்றுக்கு 11 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும்.  இந்த குடிநீர் திண்டுக்கல் மாவட்டம் பன்னைப்பட்டியில் இருந்து மதுரைக்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

ஆனால் மதுரை மக்களின் மக்கள் தொகை 17 லட்சத்திற்கு மேல் இருப்பதால் குடிநீரின் தேவையோ 24 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக உள்ளது. அதனால் மேலும் பற்றாக்குறையான தண்ணீரை எடுக்க தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மின் நிலையம் பகுதிக்கு மேல் 42 மீட்டர் 140 அடிக்கு தடுப்பனை கட்டி நீர் தேக்கி வைக்கும் ராட்சத குழாய்கள் மூலம் மீதம் இருக்கும் 12 கோடியே 5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அப்படி எடுக்கப்படும் தண்ணீரால் தேனி மாவட்டம்  முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என பொதுமக்களும் விவசாயிகளும் கூறுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

ஏற்கனவே பருவ நிலை மாற்றம் முல்லை பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வழக்கமாக நடைபெறும் இரு போக நெல் விவசாயத்திற்கு தண்ணிர் பற்றாக்குறை என தற்போதைய சூழலில் இரு போகம் நெல் விவசாயம் நடைபெறாமல் இருந்து வரும் நிலையில் குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்  மட்டுமல்லாமல் விவசாயமும் மேலும் பாதிப்படையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

கோடை காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் மூலம் நேரடியாக தண்ணீர் கொண்டு செல்லாமல் வழக்கமாக  ஆறுகள் , அணைகள் மூலம் கொண்டு செல்வதை துரிதப்படுத்த வைகை ணையை தூர்வாருதல், ஆறுகளை தூர்வாருதல் முல்லை பெரியாற்றில் தண்ணீரை ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்படுவதை தவிர்த்தல் போன்றவற்றால் மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி வகையாக செய்ய வேண்டும் எனவும் மாற்று வழியையே தாங்கள் விரும்புவதாக இப்பகுதி பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget