தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி சேதம்
உருட்டி குளத்திலிருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் புகுந்ததால் நடவு செய்த நெல்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது நெல் விவசாயிகள் வேதனை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்த கனமழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, தேனி நகர் பகுதி, பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளிக்கு முன்பு வரை நான்கு நாட்களாக மழை பெய்யாது இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை மற்றும் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தெய்வேந்திரபுரம், பெருமாள்புரம், வைத்தியநாதபுரம், எ.புதுப்பட்டி, வடுகபட்டி, தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல்தற்போது வரை விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.மேலும் மூன்றாவது நாளாக பெரியகுளம் பகுதியில் மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள் மற்றும் முதல் போக சாகுபடியில் நெல் நடவு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி பகுதியில் உள்ள ஆண்டி குளம் வெளியேறும் உபரிநீர்கள் அப்பகுதியில் உள்ள உருட்டி குளத்துக்கு வருகின்றனர். இந்நிலையில் தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உருட்டி குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் மேலும் உருட்டி குளத்தில் உபரி நீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து நடவு செய்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக நெல் பயிர் இரண்டு தினங்களுக்கு முன்பு நடவு செய்த நிலையில் தொடர் மழை காரணமாக உருட்டி குளத்தில் இருந்து நீர் வெளியேற முடியாமல் நடவு செய்த நெல் பயிர் நிலத்துக்குள் புகுந்ததால் நடவு செய்த நெல் பயிர் அழுகும் சூழ்நிலையில் உள்ளது.
மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் உருட்டி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் வருவதால் முற்றிலும் நடவு செய்யும் நெல் பயிர்கள் சேதம் அடைவதாக அப்பகுதி நெல் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக தமிழரசு சார்பாக உடனடியாக சேதம் அடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.