மேலும் அறிய
வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்- ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்
’’வனப்பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்போவதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த நிலையில் சந்தேகம் அடைந்த மாமனார் வனத்துறை அலுவலகம் சென்று விசாரித்தார்’’
போலி வனத்துறை அதிகாரியாக ஏங்கஸ்
தேனி மாவட்டம் கூடலூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் ராமர் என்பவர். இவரது மகன் ஏங்கல்ஸ். இவருக்கும், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கர்ணன் மகள் ஹர்சிலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஏங்கல்ஸ், ஹர்சிலாவை திருமணம் முடிக்க பேச்சுவார்த்தை செய்யும்போது ஏங்கல்ஸ் தன்னை வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை வரை உள்ள வனப்பகுதி தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை நம்ப வைப்பதற்காக அவர், வனத்துறை வாகனம் முன்பு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் காட்டியுள்ளார்.
இதனை நம்பிய ஹர்சிலா குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, மணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது 65 பவுன் நகைகளையும், 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு வனத்துறை அலுவலகத்திற்கு செல்வதாக கூறி தினசரி வெளியே சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவர் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க இருப்பதாக தனது மனைவி மற்றும் மாமனாரிடம் கூறினார்.
மேலும் அதற்காக தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கர்ணன், வனத்துறை அலுவலகங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் வனத்துறை அதிகாரி இல்லை என்பதும், தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனை கேட்டு கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ஏங்கல்ஸ் பணம் மற்றும் கூடுதல் நகைகள் கேட்டு ஹர்சிலாவை சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஹர்சிலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி வனத்துறை அதிகாரியாக வலம் வந்த ஏங்கல்சை நேற்று கைது செய்தனர். இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர மோசடி திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ஏங்கல்ஸ் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion