மேலும் அறிய

Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

தேனி மாவட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்பட்டார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு உள்ளது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் குளிக்க சென்றனர். இதில் 10 பேர் ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்தனர். மற்ற 4 பேரில் 3 பேர் மறு கரையிலும், ஒருவர் ஆற்றில் இறங்கியும் குளித்து கொண்டிருந்தனர். இவர்கள் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

பின்னர் அது காட்டாற்று வெள்ளமாக மாறியது. இதையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டுள்ளனர். இதற்கிடையே ஆற்றின் ஒரு கரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த வசந்த் (22), வினோத் (27), பாலகுரு (24), முத்து கணேஷ் (24), கார்த்திக் (20), ராம் குமார் (26), காந்தி (22) உள்பட 10 பேர் வெள்ளம் வருவதை பார்த்து சுதாரித்து கொண்டு கரை ஏறி தப்பினர். ஆற்றின் மறுகரையில் குளித்து கொண்டிருந்த போடியை சேர்ந்த பாண்டியராஜ் (26), குமரேசன் (32), போடி அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (22) ஆகிய 3 பேரும் கரையை கடக்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த தேனி அருகே உள்ள சுக்குவேடன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

இதையடுத்து கரை ஏறி உயிர் தப்பிய மற்றவர்கள் போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குரங்கணி போலீசார் மற்றும் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மறுகரையில் தவித்து கொண்டிருந்த 3 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.  இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சுரேசை தீயணைப்பு படையினர் தேடினர். இந்த தேடுதல் பணியானது இரவு 7.30 மணி வரை நீடித்தது. பின்னர் சுரேசை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில் இரவு நேரமானதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

Theni: ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்

இந்த தேடுதல் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் மின்வாரிய ஊழியர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுரேசுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு கிருத்திகா(23) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget