மேலும் அறிய

தேனி : 3 மணிநேர போராட்டம் - கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்ட வனப்பகுதியினர்! எப்படி?

தேனி அருகே பூதிப்புரம் மலையடிவார பகுதியில் 100 அடி உயரமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

தேனி அருகே பூதிப்புரம் மலையடிவார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தொடர்ந்து வனத்துறைக்கு புகார் வந்தது. தேனியிலிருந்து  சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு வழியாக விவசாயிகள் சிலர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த தோப்பில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதனால் அதன் அருகில் சென்ற விவசாயிகள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சிறுத்தை தண்ணீருக்குள் தத்தளித்தபடி உருமிக் கொண்டு இருந்ததை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் விவசாயிகள் தகவல் கொடுத்துள்ளனர்.


தேனி : 3 மணிநேர போராட்டம் - கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்ட வனப்பகுதியினர்! எப்படி?

தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 100 அடி ஆழம் கொண்டிருந்தது. கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை உள்ளிருந்த ஒரு கம்பியை தொற்றிக் கொண்டு இருந்தது. சிறுத்தையை மீட்கும் போது மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் மீட்பு பணிகள் குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து பேசினர். பின்னர், கயிறு ஏணியை கிணற்றுக்குள் இறக்கினர். அந்த கயிறு ஏணியை பிடித்து சிறுத்தை மேலே ஏறி தப்பிச் செல்லட்டும் என்ற நோக்கத்தில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறுத்தை அந்த ஏணியில் ஏறவில்லை.

கருக்கலைப்பு உரிமை ரத்து! அடுத்து தன்பாலின திருமண உரிமை? அமெரிக்காவில் நடப்பது என்ன?


தேனி : 3 மணிநேர போராட்டம் - கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்ட வனப்பகுதியினர்! எப்படி?

பின்னர் கிணற்றுக்குள் வலையை வீசி சிறுத்தையை தீயணைப்பு படையினர் பிடித்தனர். அப்போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சிறுத்தை சத்தம் எழுப்பியது. பாதி கிணறு தூக்கிய நிலையில், பாதுகாப்பு கருதி அனைவரும் அவர்கள் வந்த வாகனங்களுக்குள் ஏறி பதுங்கி கொண்டனர். பின்னர் வாகனங்களில் இருந்தபடி வலையோடு இணைக்கப்பட்டு இருந்த கயிறை மேலே தூக்கினர். வலை கிணற்றின் மேலே வந்த போது அதற்குள் இருந்த சிறுத்தை வேகமாக வெளியே பாய்ந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் அது மலைப்பகுதியை நோக்கி ஓடியது. இந்த மீட்பு பணி மாலை 5.30 மணி வரை நடந்தது. சுமார் 3½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தை மீட்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget