மேலும் அறிய

Theni: சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு; சென்னை வருவதற்குள் உடல் சிதைந்த அவலம் - நடந்தது என்ன.?

சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு கொடுக்கும்  நிவாரணத்தை கூட தாங்கள் கேட்கவில்லை. ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்று விபத்தில் இறந்த மகளுக்கு ஒரு ஆறுதலோ எந்த ஒரு மரியாதை கூட செய்யவில்லை.

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (47).  இவர் வாகன ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்து, அதன்படி அவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 2 பேருடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று முன் தினம் சுற்றுலா வந்தனர்.


Theni: சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு; சென்னை வருவதற்குள் உடல் சிதைந்த அவலம் - நடந்தது என்ன.?

பின்னர் அவர்கள் அனைவரும் அருவியியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர். இதைத்தொடர்ந்து பெமினா உள்பட 6 பேரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது. இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெமினாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் சோகப்படுத்தியது.


Theni: சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு; சென்னை வருவதற்குள் உடல் சிதைந்த அவலம் - நடந்தது என்ன.?

இதுகுறித்து தகவல் அறிந்த  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெமினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து இறந்த மாணவியின் தந்தை  நிக்ஸ்ன கூறுகையில், “சுற்றுலா வந்த இடத்தில் எனது மகள் இறப்பு என்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பேர் இழப்பாக உள்ளது. இறந்த எனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தங்களை அதிகாரிகள் அலைக்கழித்தனர். பிரேத பரிசோதனை செய்த பின்பும் கூட உடலை வைக்க குளிர் சாதன பெட்டி இல்லாத ஆம்புலன்ஸ்சில் ஏற்றியதும் தனது சொந்த ஊருக்குள் வருவதற்குள் 3 மாவட்டத்தில் மாற்றி மாற்றி எனது மகளின் உடலை வேறு வேறு ஆம்புலன்ஸ்சில் மாற்றியதும், நாங்கள் இறந்த எனது மகளின் உடலை வைத்து மிகவும் அலைக்கழிக்கப்பட்டோம்” என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

குறிப்பாக தனது மகள் உடலை ஏற்றி வந்த எந்த ஆம்புலன்ஸ்சிலும் குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் உடல் சிதைந்ததாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமத்திற்குள்ளானதாக குற்றம் சாட்டியுள்ளார். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு கொடுக்கும்  நிவாரணத்தை கூட தாங்கள் கேட்கவில்லை. ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்று விபத்தில் இறந்த தனது மகளுக்கு அங்கு சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கூட ஒரு ஆறுதலோ எந்த ஒரு மரியாதை கூட செய்யவில்லை என மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget