தேனி : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் லெனின் (35). இவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் கூடலூர் காவல் நிலையங்களில் 3 வழக்குகள், 7 இதர வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் கந்துவட்டி வசூலிக்க கூடாது என போலீசார் அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் அவர், நேரு என்பவரிடம் மீண்டும் வட்டி பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
இதனால் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனினை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் லெனினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் லெனின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தேனி அல்லிநகரம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி வந்து, அதனை சிலர் பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில், தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீதர், பாண்டீஸ்வரன் என்ற பாண்டி, அல்லிநகரம் வெங்கலாகோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (28), ராஜா என்ற கோழிராஜா (27), அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த குமார் (30) ஆகிய 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிபாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு...நாளை தொடக்கம்...முக்கியத்துவம் என்ன?
அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்