Theni : கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் : பேரூராட்சி பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
தேனியில் கழிப்பிட கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினர் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி 7-வது வார்டில் பெண்கள் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் அருகில் மரத்தடியில் பாவலர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7), ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ (6) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 1, 2-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன் தினம் மாலை இவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அங்குள்ள கழிப்பிட கழிவுநீர் தொட்டியின் மேல் மூடி சேதம் அடைந்து இருந்தது.
தேனி: பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சோகம்
விளையாடியபோது கழிவுநீர் தொட்டியின் மேல் மிதித்ததில் அது உடைந்து மாணவிகள் இருவரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மாணவிகளை தொட்டிக்குள் இருந்து மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
ஹேப்பி நியூஸ்.. ரேஷன் கடையில் இனி இந்த பிரச்சனை இல்லை… இதை செய்தே பொருட்கள் வாங்கலாம்..
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். கழிப்பிட தொட்டியின் மூடி பழுதாகி இருந்தும் அதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி, இளநிலை உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முரளிதரன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த துயரமான சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.