அழிந்து வரும் டால்பீன்களை காக்க மன்னர் வளைகுடாவில் பவளப்பாறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
டால்பின் இனங்கள் அழிந்து வருவதை தடுக்க மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குள் நீந்தி சென்று பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக “ஓங்கி” எனப்படும் கூன்முதுகி ஓங்கி உள்ளிட்ட அரியவகை டால்பின்கள் வாழ்கின்றன. ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும், மீனவர்களால் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த டால்பின் இனங்கள் சமீபகாலமாக படகுகளில் மோதியும், மீனவர்களால் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் அவைகளை உண்டு அரிய வகை டால்பின் இனங்கள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்குள் நீந்தி சென்று அங்குள்ள பவழப்பாறைகள் மீது படிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில், சமீப காலமாக பாறைகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உண்டும் டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், பவளப்பாறை மற்றும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிக மாக வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் அடிக்கடி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பாறைகள் மீது மோதியும், மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.
டால்பின்கள் அதிசயிக்கத்தக்க விதத்தில் சமூக மனப்பான்மை கொண்டு மனிதர்கள் போலவே குழுவாக உணவு தேடுவது, அவற்றைப் பகிர்ந்து உண்ணுவது என வாழ்பவை. கடலில் ஜாலி பார்ட்டி என்றால் சந்தேகமின்றி டால்பினை சுட்டிக் காட்டலாம். சுட்டித்தனமாக சக டால்பின்களோடு விளையாடுவது, சண்டையிடுவது என மனிதர்களைப் போலவே பொழுது போக்காகவே வாழும் வகை இவை. டால்பின்கள் தம்மோடு இயற்கை அளித்த ரேடாராக எதிரொலியைக் கொண்டுள்ளது. இத்திறனை வைத்தே வழி கண்டறிந்து உணவு தேடுகிறது. கடல் மட்டத்தைத் தாண்டி சுமார் 20 அடி உயரம் வரை கூட எம்பிக் குதித்து விளையாடும் சுறுசுறு குறும்புத்தனம் கொண்டவை இந்த டால்பின்கள். காயம்பட்ட மீன்களை பாதுகாப்பாக எடுத்து வந்து சுவாசிக்கச் செய்ய உதவுவதில் டால்பின்களுக்கு இணையாக எந்த விலங்கினமும் கிடையாது. மீன்களுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கும் உதவி செய்யக் கூடியவை இவை. டால்பின்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. ஒவ்வொரு டால்பின் மீனும் தனக்கே உரிய தனித்துவ விசில் ஒலியைக் கொண்டுள்ளது.
இந்த டால்பின்கள் மீனவர்கள் வலைகள், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறைப்பை பாதிக்கப்பட்டும், மேலும், அதிக இரைச்சலுடன் செல்லும் படகுகளாலும் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பாளர் துறை சார்பாக அங்குள்ள கடலில் மிதக்கும் மற்றும் கடலுக்கு அடியில் கிடக்கும் பிளாஸ்டிக்குகளை அகற்ற தனியே ஸ்கூபா டைவிங் வீரர்களை கொண்டு மாதம்தோறும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக டால்பின் உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பை தடுக்க முடியும். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது சேதம் அடையும் பழைய வலைகளை கடலுக்குள் வீசி எறியாமல் அதை எடுத்துக்கொண்டு கரைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஏனென்றால், கடலுக்குள் வீசி எறியும் சேதமடைந்த வலைகளை உண்ணும் டால்பின்கள் உயிரிழக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் லேசான விசில் சப்தம் எழுப்பியவுடன் நண்பன் போல் கூடவே வரும், வந்தால் கரைக்கு வரும் வழியில் படகுகளில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது எனவே கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் டால்பின்களை தொந்தரவு செய்யக்கூடாது இதன் மூலம் அரிய வகை டால்பின் இனங்களை அழிவிலிருந்து காக்க முடியும் என மன்னார் வளைகுடா வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.