தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழந்த 2 காளைகள் -ஊர்கூடி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
திண்டுகல் மாவட்டத்தில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கும், தேனியில் உயிரிழந்த பட்டத்து காளைக்கும் ஊர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்
திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசிப்பவர் ஆட்டுக்கார சேசு. இவர், கடந்த 8 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். இதற்கு சுறா என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த காளையை, தனது குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து ஆட்டுக்கார சேசு குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு இந்த காளை பரிசுகளை வென்றிருக்கிறது. இந்தநிலையில் அ.வெள்ளோடு பகுதியில் உழவர் திருநாளுக்கு அடுத்த நாள் ஆடு, மாடு, கோழிகளை அங்குள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து சாமி கும்பிட்டு பொங்கல் வைப்பார்கள். பின்னர் அந்த பொங்கலை ஆடு, மாடுகளுக்கு கொடுப்பது வழக்கம். அதன்படி பகவதி அம்மன் கோயிலுக்கு விவசாயிகள் ஆடு, மாடுகளை கொண்டு வந்தனர்.
தற்போது அதற்கு வயது 23. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் பண்டிகையன்று நடத்தப்படும் ஊர்வலத்தில் இந்த காளை அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நடந்து வரும். அந்த காளையை மக்கள் வணங்கி, அது நடந்து வரும் பாதையில் மலர் தூவி வரவேற்பார்கள். இந்த ஆண்டும் சிறப்பாக ஊர்வலத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு வாரகாலமாக இந்த காளை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இதனால், கடந்த 15-ந்தேதி மாட்டுப்பொங்கல் அன்று ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.
காளைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இந்தநிலையில் பட்டத்து காளை நேற்று மாலை உயிரிழந்தது. இதை அறிந்த மக்கள் காளை பராமரிக்கப்படும் இடத்தில் சோகத்துடன் கூடினர். அங்கு காளையின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காளையின் உடலுக்கு கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இரவில் காளையின் உடல் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஊர்காலப்பர் கோவில் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விரைவில் புதிய பட்டத்து காளையை ஊர்மக்கள் ஒன்றுகூடி தேர்வு செய்ய உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.





















