மேலும் அறிய

பழனி அருகே கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்த பெண்கள்

ஒருபிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து கோவில் முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியருகே கோவிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் சாமி கும்பிட அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தில், கோவிலுக்குள் விடமறுத்து பெண்கள் கோவில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மற்றொரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்‌.

பழனி அருகே கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்த பெண்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சித்தரேவு கிராமம். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், உள்ளூர் நிர்வாக பிரச்சனை காரணமாக கோவில் பராமரிப்பின்றி பூட்டப்பட்டதை தொடர்ந்து கோவில் சிதிலமடைந்தது. இதனையடுத்து சிதிலமடைந்த கோவிலை ஒருதரப்பினர் சேர்ந்து புனரமைத்து கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். இந்நிலையில்  புதிதாக கட்டப்பட்ட கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றம்சாட்டி  மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

Mayiladuthurai Local Holiday: மழை எல்லாம் இல்லை; ஆனாலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை - காரணம் இதுதான்!

பழனி அருகே கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்த பெண்கள்

இந்த வழக்கில் சித்தரேவு கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனமக்கள் உள்ளே சென்று சாமி கும்பிட அனுமதி வழங்கி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Students Admission: தமிழக அரசு அதிரடி.. கல்லூரி செல்லாத 777 அரசுப்பள்ளி மாணவர்கள்.. சேர்க்கையை உறுதிசெய்து உதவித்தொகை வழங்க உத்தரவு

பழனி அருகே கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்த பெண்கள்

இதையறிந்த மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்கள் கோவில்  வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் வரிசெலுத்தி கட்டிய கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் உத்தரவை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும், கோவிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்யலாம் என்பது குறித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சமரசம் செய்தனர்.

CM Stalin letter to union minister: விவசாயிகளுக்காக மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! விவரம் உள்ளே..

பழனி அருகே கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்த பெண்கள்

இதையடுத்து அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கோட்டாட்சியர் சிவக்குமார் கோவிலை திறக்க, போலீசார் பாதுகாப்புடன் பட்டியல் இன மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று  சாமி தரிசனம் செய்தனர். ஒருபிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து கோவில் முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget