மேலும் அறிய
Advertisement
Madurai: 'இந்திய துணை கண்டமே பேசுகிற அளவுக்கு மதுரை மாநாடு இருக்கும்..' ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேட்டி !
ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர மக்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. அதனால் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை. -எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்திப்பில்...,” கழக பொதுச் செயலாளர் டெல்லி சென்று பிஜேபி தலைவர்களை சந்தித்து வந்த பிறகு இன்றைக்கு அவர் மிகத் தெளிவாக பல்வேறு கருத்துகளை தெளிவுபடுத்திருக்கிறார்கள். கூட்டணிகளில் இருந்தாலும் நமது பணிகளை சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற நல்ல அறிவுரைகளை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் அதன் அடிப்படையில் எங்கள் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஓ.பி.எஸ்., நடத்திய மாநாட்டில் கட்சி கொடி பயன்படுத்தியது தொடர்பான கேள்விக்கு..
ஓ.பி.எஸ்., கொடியை பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர மக்கள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. அதனால் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் முழுவதுமே அண்ணா திமுக எடப்பாடியாரை தலைமையை ஆதரிக்கிற காரணத்தாலும் கழக நண்பர்களும் ஆதரிக்கிற காரணத்தால் தேர்தல் ஆணையத்திலும் இயற்கையாக புகார் நடக்கிறது. இது கர்நாடகத்தில் தவறாக பயன்படுத்தியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது இன்று வழக்கு பதியப்பட்டுள்ளது. இது ஒரு முன் உதாரணம் அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று போலியான ஆவணங்களை தயார் செய்தது தப்பு இன்றைக்கு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இல்லை சின்னம் அங்கீகாரத்திற்காக கையெழுத்து போட்டதின் விளைவாக ஓபிஎஸ் இன் தொண்டர் ஒருவர் வேட்பாளர் வழக்கை சகித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலைமையை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருந்தால் இயற்கையாகவே வழக்கு தொடுக்கப்படும் நாங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையமே இதுகுறித்து தகவல் தெரிவித்தால் அவர்கள் மூலமாகவே அவர்கள் மீது புகார் செய்த பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அமைப்புகள் தொடங்கினால் கூட அவர்களுக்கான அங்கீகாரம் இல்லாமல் போய்விடும் இதுதான் சூழ்நிலை.
பேனா சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறித்த கேள்விக்கு...
மத்திய அரசின் மதிப்பீட்டுக்குள் அனுமதி கொடுத்துள்ளது பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எடப்பாடி யார் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார் அதை வைக்கணுமா வைக்க கூடாதா என்பதை சொல்வதைவிட, தேவையற்ற ஒன்று எடப்பாடியார் சொன்ன கருத்து 81 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள் அதை செயல்படுத்தும் போது 120 கோடி ரூபாய் கூட செலவாகும். ஏனென்றால் கலைஞர் நூலகத்திற்கு 80 கோடி ரூபாய் என்று சொன்னார்கள் 34 கோடி கூட்டி விட்டார்கள். சின்னத்திற்கும் தொகைகள் அதிகரிக்க கூடும் இதை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு செலவிடலாம் ஆனால் நிப்பு தொழிற்சாலை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் பேனாவின் நிப்பு தொழிற்சாலை மூடப்பட்டு கொண்டிருக்கின்றனர். நல்லா எழுதுகிற நிப்பு உள்ள பேனாவை தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கினால் நல்லது என்று எடப்பாடியார் சொல்லி உள்ளார் பயன்பாட்டிற்கு இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என்பது மக்களுடைய கருத்து இது. உண்மையான நினைவுச் சின்னம் இல்லை ஏற்கனவே அவருக்கு நினைவு மண்டபம் உள்ளது அனைத்து திறப்பு விழாவும் கலைஞரின் பெயரை வைத்து தான் திறக்கிறார்கள்.
பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் இடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு
இன்றைக்கு பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவுகள் இடிக்கப்பட்டு செயல்படுத்த விடாமல் முயற்சி எடுத்து ஏழை எளியோர் தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய இந்த உணவகங்கள் இன்றைக்கு பால் பட்டு போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் தான் செயல்படுத்தப்பட்டது ஏனென்றால் ஏழை எளிய மக்கள் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அம்மா உணவகத்தை பயன்படுத்தினார்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை செயல்படுவதை மறைமுகமாக தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான விடிவு கண்டிப்பாக வரும்.
ஆகஸ்ட் 20 நடைபெறக்கூடிய மாநாடு ஓ.பி.எஸ் நடத்திய மாநாடு விட எப்படி இருக்கும் குறித்த கேள்விக்கு
தமிழகம் மட்டுமல்லாது இந்திய துணை கண்டமே பேசுகிற அளவுக்கு மதுரை மாநாடு மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை நடத்திய எல்லா மாநாட்டை வெல்லுகிற அளவுக்கு ஏறக்குறைய 50 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் இந்த மதுரை மாநாடு இந்திய துணை கண்டமே பேசப்படுகிற இருக்கும். மாநாட்டிற்கு எல்லோரும் தயாராகி விட்டோம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா வெளி மாநிலங்கள் உள்ள எங்கள் மாநில கிளைகளில் இருந்து மதுரை மாநாட்டிற்கு வருவது என்று தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கம் மக்களை காப்பாற்றுகிற இயக்கம் என்ற உறுதிப்படுத்தும் வகையிலே இந்த மாநாடு சிறப்பாக இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion