மேலும் அறிய

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !

தேசத்தின் விடுதலைக்காக ஓடியாடித் திரிந்த அந்தப் பெருமகனின் நினைவுத்தடங்கள் மதுரையின் வரலாற்றுச் சுவடுகளாய் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன

75வது ஆண்டு சுதந்திர ஆண்டை இந்தியா கொண்டாட உள்ளது. இந்த நிலையில் சுகந்திரத்தின் பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாடும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி 13 முதல் 15ம் தேதிவரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். அதே போல் சமூக வலைதளங்களில் தங்களது பக்கங்களிலும் தேசியக் கொடியினை முகப்புப்படமாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர தினத்திற்காக நாடே தயாராகி வருகிறது. இந்நிலையில் சுதந்திர வரலாற்று வாசம் வீசும் மதுரையில் ஓர் அடையாளம் குறித்து பார்க்கலாம்.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
மகாத்மா காந்தியின் வாழ்வில் ’மதுரை மண்’ பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும். அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த அந்த மாமனிதன் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது மதுரை  காந்தி நினைவு அருங்காட்சியகம். 1948- ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார்.  அதற்கு பிறகு இந்திய திருநாட்டின் முழுவதும் 7 காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் தென்னிந்தியாவின் முழுமைக்குமாக மதுரையில் தான் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் இந்த 7 அருங்காட்சியகத்திலும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி பயன்படுத்திய 14 அசல் பொருட்களும், 32 மாதிரி பொருட்களும் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
உத்தமர் காந்தி எனும் மாமனிதனை அரையாடைப் பக்கிரியாக உலகிற்கு அடையாளம் காட்டி மகாத்மாவாக மாற்றிய மதுரை மண்ணில், அவரது குருதி தோய்ந்த உடையும், அந்த சமயம் காந்தி அணிந்திருந்த ஆடைகளும் இன்றும் அமைதியின் சாட்சியாய் நிற்கின்றன. மகாத்மாவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவின் முதல் அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவால் கடந்த 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் திறந்து வைக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் பெண் அரசியான ராணி மங்கம்மாளின் வெயில்கால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகந்த கட்டிடம்தான் பின்னாளில் காந்தி நினைவு அருங்காட்சியகம் மாற்றம் பெற்றுள்ளது.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
அப்போது காந்தியின் பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், உடைகள், சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் சால்வைகள் இந்த அருங்காட்சியகத்திற்குதான் வழங்கப்பட்டன. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தைப் போன்றே மாதிரியாகக் கட்டப்பட்ட கல்லறையும் காந்தியின் அஸ்தியை சுமந்தவாறே மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது. மிக அமைதியான சூழலில் காந்தியின் குருதி தோய்ந்த ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம் நேர்த்தியாகத் தற்போதும் பராமரித்து வருகிறது.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
'சுடப்பட்டு நான் மரணம் அடைய நேர்ந்தால் முணு முணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்' எனும் காந்தியின் வாக்கு மூலம் அத்திருவறையின் முன்பாக எழுதப்பட்டு, அவர் கொண்ட இலட்சிய வேட்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
காந்தி எனும் மாமனிதன் மறைந்து பல வருடங்கள்  கடந்த பின்னரும்கூட அவரை நாம் நினைக்கிறோம், வாசிக்கிறோம் என்றால், அந்தத் தாக்கத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடியாது. வாழ்க நீ எம்மான்...! வையத்து நாட்டிலெல்லாம்...! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்.,,,,! புவிக்குளே முதன்மையுற்றாய்...!
 
காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
மேலும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ்..,” காந்தியின் நினைவு அருங்காட்சியகத்தில் முதல் பிரிவில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறும், 2-ம் பிரிவில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், 3-ம் பிரிவில் அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் தான் காந்தியடிகள் நேரடியாக பயன்படுத்திய 14 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் சுடப்பட்டு இறந்த அந்த இறுதி நாளின் போது அணிந்திருந்த வேட்டி ரத்தக்கறையுடன் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது கைப்பட எழுதிய கடிதங்கள் இங்கே உள்ளன. 4-வது பிரிவில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த புகைப்படங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளது” என்றார்.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் (பொறுப்பு) நடராஜன் கூறுகையில்..,” காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. காந்தியம் சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோக யோகா-தியானம் உடல்நலம் ஆகியவை சார்ந்த படிப்புகளும் கல்லூரி மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன. இங்கு யோகா பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகளில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். ஹிந்தி மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. காந்தியடிகளின் நிர்மாண திட்டங்களில் ஒன்றான குடிசைத் தொழில் சார்ந்த சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 300 மாணவர்கள் இங்கிருந்து பயிற்சி பெற்று வெளியே செல்கின்றனர்” என்கிறார்.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
காந்தி அருங்காட்சியக நூலகர் முனைவர் ரவிச்சந்திரன் கூறுகையில்..,”  வினோபா பாவே, ஜெயப்ரகாஷ் நாராயணன், காமராஜர், அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோர் வருகை தந்து இந்த நூலகத்தை சிறப்பித்துள்ளனர். நூலகவியல் தந்தை எஸ்.ஆர் ரங்கநாதன், இதில் சிறப்பு நூலகமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளார். மகாத்மா காந்தி நடத்திய யங் இந்தியா, ஹரிஜன் நூல்களின் மூலப்பிரதிகள் உள்ளன. மகாத்மா காந்தி அடிகள் எழுதிய 28,700 கடிதங்களின் நகல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

காந்திக்காக இந்தியாவிலேயே அமைந்த முதல் நினைவு அருங்காட்சியகம்; பெருமை சொல்லும் மதுரை !
 
பேரமைதி நிலவும் இந்த வளாகத்தின் உள்ளே, காந்திய தத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் ஏதோ ஒரு வகையில் நம்மை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்களாக வந்து குவிகின்றனர். காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் இங்கு செயல்படும் கல்வி மையம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. தேசத்தின் விடுதலைக்காக ஓடியாடித் திரிந்த அந்தப் பெருமகனின் நினைவுத்தடங்கள் மதுரையின் வரலாற்றுச் சுவடுகளாய் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. அதனை வருங்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக வரலாற்று சின்னமாய் மாற்றி பாதுகாக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget