மேலும் அறிய

ஆசிரியர் தகுதித் தேர்வு: திண்டுக்கல், தேனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

29 மாற்றுத் திறனாளித்தேர்வர்களும் அடங்குவர். இத்தேர்வு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு மையங்களில் இன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 2161 தேர்வர்கள் எழுதினர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடந்தன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வை மாநிலத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதவிருந்தனர்.


ஆசிரியர் தகுதித் தேர்வு: திண்டுக்கல், தேனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இன்று (ஜூலை 4), நாளையும் (ஜூலை 5) இத்தேர்வு நடக்கிறது. இன்று நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 161 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. காலை 9:00 மணி முதல் தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகள் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேர்வு மையங்களில் நேற்று முன்னேற்பாடு பணிகள் நடந்தன. தேர்வு எழுத வசதியாக இருக்கைகள் அமைத்தல், தேர்வர் எண் எழுதுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.


ஆசிரியர் தகுதித் தேர்வு: திண்டுக்கல், தேனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

தொடர்ந்து நாளை (ஜூலை 5) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் 4814 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் (பொ) அமுதா துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்தார்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு I இன்று (04.07.2026) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன்  அவர்கள் மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்,


ஆசிரியர் தகுதித் தேர்வு: திண்டுக்கல், தேனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு I, இன்று அனைத்து இடங்களிலும் நடைபெற்றது. அதனையொட்டி, தேனி மாவட்டத்தில் 1302 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றுள்ளனர். இதில் 29 மாற்றுத் திறனாளித்தேர்வர்களும் அடங்குவர். இத்தேர்வு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வாகும். இத்தேர்வு மாவட்டத்தில் மேரிமாதா மெட்ரிக் மேல்லைப்பள்ளி, சரஸ்வதி நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வினை நடத்த 105 அலுவலர்கள் /ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும்படைக்குழு நியமிக்கப்பட்டு, தேர்வுமைய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்வு மையத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (05.07.2026)  ஆசிரியர் தகுதித்தேர்வு II நடைபெற உள்ளது. இத்தேர்வினை 3512 தேர்வர்கள் 12 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வினை நடத்த 260 அலுவலர்கள் / ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்வர்கள் பயன்பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்,

Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget