மேலும் அறிய

மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை என்ன சொல்கிறது !

மிதமான மழையும், சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பதிவாகலாம். 

கடுமையான வெயிலுக்கு பின் தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக வாட்டியது. அவ்வப்போது மழை பெய்வது சற்று நிம்மதியை கொடுத்தது. கடும் வெயில் காரணமாக பள்ளிகள் கூட தாமதமாக திறக்கப்பட்டது. வெயில் முழுமையாக குறையாத சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்தாண்டு அதிக வெயில் இருந்ததால் ஏசி, ஃபேன் விற்பனைகளும் அதிகளவு இருந்ததாக தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பதிவாகலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

 மதுரை: இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று (17.06.2026) நகரின் சில பகுதிகளில் மழையால் நீர்தேக்கம் ஏற்பட்டது. குறிப்பாக கோரிப்பாளை, டி.ஆர்.ஓ. காலனி, கே.புதூர், அண்ணா பேருந்துநிலையம், அய்யர்பங்களா உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. அதே போல் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.

சிவகங்கை: மேகமூட்டமான வானிலையுடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

விருதுநகர்: இன்று மேகமூட்டமான வானிலை நிலவும். சுமார் 4–5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில் மரங்களின் அருகில் நிற்பதைத் தவிர்க்கவும். இடி மின்னல் ஏற்படும் போது திறந்த வெளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்கு வாய்ப்புள்ள தென் மாவட்டங்கள்:

* மதுரை,

*  சிவகங்கை,

*  தேனி,

*  திண்டுக்கல்,

*  ராமநாதபுரம்,

*  விருதுநகர்,

*  திருநெல்வேலி,

*  தென்காசி,

*  கன்னியாகுமரி.

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது வானிலை அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்; கடலோரப் பகுதிகளில் 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் என தென் மாவட்டங்களில் வெயில் சற்று குறைவாக முகம் காட்டும் எனவும் சொல்லப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
Embed widget