மேலும் அறிய

திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க - அண்ணாமலை

நிறைந்த அமாவாசையில் ஒரு ரூபாய் மகளிர் உரிமைத்தொகையாக போட்டுள்ள திமுக அரசு குறித்தும் கிண்டல் செய்தார் அண்ணாமலை. பொதுக் கூட்ட மேடையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த அரங்கேறிய  சங்கி கூட்டம் பாடல். 

முதல்வர் ஸ்டாலினை திருடன் என்றும் மோடியை மனம் கவர்ந்த திருடன் என்று மேடையில் அண்ணாமலை பேசியதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க என மகளிர் உரிமை தொகை விலை உயர்வு குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தார். சனாதனம் பற்றி பேசிக்கொண்டு நிறைந்த அமாவாசையில் ஒரு ரூபாய் மகளிர் உரிமைத்தொகையாக போட்டுள்ள திமுக அரசு குறித்தும் கிண்டல் செய்த அண்ணாமலை. 

திண்டுக்கல் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். வியாழனன்று நத்தம், சாணார்பட்டி வழியாக திண்டுக்கல் வந்த அண்ணாமலைக்கு மணிக்கூண்டு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னதாக மேடையின் முன்  கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்த அண்ணாமலை மற்றும் மோடியை பற்றிய பாடல்கள் அரங்கேறியது, அதில் தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்த நாங்கள் சங்கி கூட்டம் தான் என்ற பாடல் இடம் பெற்று மேடையின் முன் இருந்த பெண் தொண்டர்களை ஆட்டம் போட வைத்தது உற்சாகப்படுத்தியது  பின்பு அண்ணாமலை பொதுக்கூட்டத்தில்   கலந்து கொண்டு அவர் பேசினார்.

திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க -  அண்ணாமலை

ஊழல் செய்து பிழைப்பதற்காக ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. அந்த கூட்டம் ஒவ்வொரு மாவட்;டத்தில் கூட குறு நில மன்னர்களாக அவர்களுக்கு பிறகு அவர்களது குழந்தைகள்,  அவர்களுடைய குழந்தைகளுக்குப் பிறகு அவர்களுடைய குழந்தைகள் என்று 3வது தலைமுறையிலோ திராவிட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள், மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி, பிறகு இன்ப நிதி என்று ஒரு பட்டியில் போய்க் கொண்டிருக்கிறதோ அதைப் போல் தமிழகம் முழுவதும் திராவிட அரசியல் 3ம் தலைமுறை,  4ம் தலைமுறையாக உள்ளது. ஒரு மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.  ஜுலை 28ம் தேதிக்கு பிறகு 40 நாட்களுக்கு மேல்  எழுச்சி உள்ளது.  அதே எழுச்சியை திண்டுக்கல்லில் பார்க்கிறேன். மாற்றம் வேண்டும் என்கிற சிம்மக்குரல் அற்புதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.  திண்டுக்கல் என்பது ஒரு சாதாரண ஊர் கிடையாது. உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஊர். ஒரு காலத்திலே திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்ட ஊர். திண்டு போல் ஒரு பெரிய மலை இருந்ததால் திண்டீஸ்வரம் என்று பெயர் வந்தது. ஆகவே மலை தான் உங்களுக்கு முக்கியம். திப்பு சுல்தான் படையெடுப்புக்கு முன்பு எல்லா நல்ல விசயங்களும் அந்த மலையில் உள்ள சாமியை பார்த்து தான் ஆரம்பிப்பார்கள். எப்படி திண்டீஸ்வரம் திண்டுக்கல்லாக மாறியது என்பது உங்களுக்கு தெரியும்.  எங்கேயோ பிறந்த சுண்டக்காய் ஒரு குடும்பத்தில் 3வது தலைமுறையாக உள்ள சில பேர் தமிழகத்திலே சனாதனத்தை ஒழித்துவிடுவேன் இந்து தர்மத்தை ஒழித்துவிடுவேன் என்று பேசி வருகிறார்கள். 

திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க -  அண்ணாமலை

நிறைந்த அமாவாசையில் ஒரு ரூபாய் போட்டு சனாதனம் பற்றி பேசுகிறாரகள். என்ன காமெடி செய்கிறீர்கள். மக்கள் முட்டாள்களா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார். மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கெல்லாம் ரூ.1000 வந்துவிட்டதா? ஒரு ரூபாய் வங்கிக்கணக்கில் போட்டுள்ளார்கள். பையன் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று  பேசுகிறார். அப்பா  நல்ல அமாவாசையா பார்த்து ஒரு ரூபாய் போடுகிறார்.  என்ன காமெடி பண்ணிக்கிட்டிருக்கீங்களா? மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கெர்ண்டிருக்கிறீர்களா?

அதேபோல் அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்று பட்டியலிட்டு பேசினார் அப்போது இங்கே உண்மையான திருடன் திராவிட முன்னேற்றக்கழகம். காரணம். 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள். ஊழல் குற்றச்சாட்டுல கோர்ட்டில்  ஊழல் வழக்கில் ஜட்ஜ்மெண்ட் ஆகிவிட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அமைச்சர்கள்.  இப்ப திமுக அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் ஊழல்வாதிகள். 35ல் 11 பேர் 3ல் 1. புதிதாக 4 பேர்  மேல் நாங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளோம். மொத்தம் 15. இந்த பாதயாத்திரை முடியும் போது இன்னும் 6 பேர் குற்றச்சாட்டு வைப்போம். அது 21 ஆக மாறும். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியில் வரலாற்றில் எங்கேயும் நடந்தது கிடையாது. 2024ம் ஆண்டு தேர்தலில் திமுகவை வேரறுத்து மொத்தமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க -  அண்ணாமலை

திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க. மகளிர் உரிமை தொகை விலை உயர்வு குறித்து அண்ணாமலை விமர்சனம். சில பெண்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி ரூ.1000 வந்திருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் எத்தனை பொருட்களின் மீது விலையை ஏற்றியிருக்கிறார்கள் என்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். சொத்துவரி 50 சதவீத உயர்வு மின்சார கட்டணம் 50 சதவீத உயர்வு. பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்வு. இன்றைக்கு ஆவின் ஒரு லிட்டர் நெய் 515 முதல் 700 வரை உயர்ந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து கத்தையா புடுங்கிறாங்க. ஏறிய விலை வாசியை ஊறுகாய் போல் தொட்டுப்பார்ப்பதற்காகத் தான் இந்த ரூ.1000. ஆனால் மோடி அய்யா உங்கள் வீட்டுக்கு குடிநீரில் இணைப்பு பைப்பின் விலை 8800 ரூபாய். இதே திமுகக்கார்கள் என்றால் என்ன செய்வார்கள். போஸ்டர் ஒட்டி, ஸ்டிக்கர் ஒட்டி 8000 கொடுத்தோம் என்று சொல்வார்கள். இதெல்லாம் ஒழித்துக்கட்டுவதற்கு 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget