மேலும் அறிய

Suruli Falls: தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி அருவி.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அருவிக்கு செல்லும் வழியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை சார்பில் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற  நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.

”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!

Suruli Falls: தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி அருவி.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தற்போது கோடை காலம் நெறுங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம்  மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் மாவட்டத்தில்  உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகின்றன. இந்த நிலையில்  சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு வரும் நீர் வரத்து இல்லாததால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

அருவிக்கு நீர் வரத்து வரும் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் நேற்று மதியம் முதல் நீர்வரத்து திடீரென முற்றிலும் குறைந்துள்ளது. அருவி பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது.

தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!

Suruli Falls: தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி அருவி.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அருவியில் நீர் வரத்து அடியோடு நின்றதால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் இன்றி பாறையாக இருக்கும் பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது அருவியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை சார்பில் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது.

Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?

இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர் வருகின்றது. நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget