மேலும் அறிய

ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்

முதல்வர் ஸ்டாலினைக் கிண்டல் செய்த அண்ணாமலை, "ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும்.

ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும். காலை முதல் மதியம் வரை 'டெல்லி', மதியம் முதல் மாலை வரை 'ஹிந்தி', மாலைக்குப் பிறகு 'மத்திய அரசு வஞ்சிக்குது' - இதையேதான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம். திமுக தலைவர்களுக்கு வாய் இல்லையென்றால் நாய் தூக்கிச் சென்றும், கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை எனக் கிண்டல் செய்தார்.


ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் விடியல் சேகரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று  பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் திமுக அரசு மற்றும் அமைச்சர் சக்கரபாணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "1996-க்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் ஒரு விடியல் வரவேண்டும் என்பதற்காக விடியல் சேகர் அண்ணன் இங்கே வந்திருக்கிறார். 30 ஆண்டு காலமாக ஒரே சட்டமன்ற உறுப்பினர் இங்கே இருக்கிறார். ஒரு மனிதன் தன்னுடைய இரண்டு தலைமுறையை ஒருவருக்கே கொடுத்திருக்கிறான். ஆனால், 30 ஆண்டுகளில் ஒட்டன்சத்திரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? விவசாய மக்கள் இன்னும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தை இன்னும் வறட்சிப் பகுதியாகத்தான் அமைச்சர் சக்கரபாணி வைத்திருக்கிறார்" எனக்கூறினார் 

வேட்பாளர் விடியல் சேகரின் தகுதிகள் குறித்துப் பேசுகையில், "2006 முதல் 2011 வரை காங்கேயம் எம்எல்ஏ-வாக இருந்தபோது, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் 100% வருகைப் பதிவோடு சட்டமன்றத்திற்குச் சென்றவர் இவர். தனது தொகுதிக்காக அதிகக் கேள்விகளைக் கேட்ட முதல் 10 எம்எல்ஏக்களில் விடியல் சேகரும் ஒருவர். ஒரு எளிய விவசாயியின் மகனான அவருக்கு நீங்கள் இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ரேஷன் துறை ஊழல்கள் குறித்துப் பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழகத்திற்கு மாதம் 2 லட்சம் டன் அரிசி அனுப்புகிறார். ஆனால், ரேஷன் கடையிலிருந்து அரிசியைக் கடத்துவதையே இவர்கள் வேலையாக வைத்திருக்கிறார்கள். 2023-ல் மட்டும் 91,000 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்துப் புகார் அளித்த குப்புசாமி என்பவரின் மகன் தீக்குளித்து இறந்து போனதை மக்கள் மறந்துவிடக் கூடாது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.


ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்

முதல்வர் ஸ்டாலினைக் கிண்டல் செய்த அண்ணாமலை, "ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும். காலை முதல் மதியம் வரை 'டெல்லி', மதியம் முதல் மாலை வரை 'ஹிந்தி', மாலைக்குப் பிறகு 'மத்திய அரசு வஞ்சிக்குது' இதையேதான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஜவுளிப் பூங்கா, தடுப்பணைகள் என திமுக கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை" என்றார்.

இறுதியாக, "ஏற்கனவே டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டு விட்டனர். ஏப்ரல் 23-ஆம் தேதி முதலமைச்சரையும் மாற்றிவிடுங்கள். மே 4-க்குப் பிறகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் முதலமைச்சராக அமர வேண்டும். அதற்கு ஒட்டன்சத்திரத்தில் 4-வது பட்டன் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து விடியல் சேகரை வெற்றி பெறச் செய்யுங்கள்" என உரையை நிறைவு செய்தார்.

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget