மேலும் அறிய
Advertisement
வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு
’’பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் இத்திட்டத்தினை இந்தியாவில் செயல்படுத்த முடியுமா? - மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி’’
மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் மொத்தம் 39 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50% நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல நீர்வழிப் பாதைகள், வாய்க்கால்கள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்று அப்பகுதி மக்கள் குடிநீருக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்காததே காரணம். நீர்நிலைகளில் மண் மற்றும் குப்பை கழிவுகள் சேருவதன் காரணமாகவே பெருவெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படதில்லை. இதனால் கண்மாய்களின் எல்லைகள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியதாக மாறிக்கொண்டே வருகின்றன. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டிடங்களை கட்டி உள்ளது. இதன் காரணமாகவே மழை காலங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்நிலைகளில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி அவற்றை தூர்வாரி பராமரிப்பது போன்றவையே வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தீர்வாக அமையும். ஆனால் அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை.
உலக வெப்பமயமாதலால் ஏராளமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாப்பதும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் அரசின் கடமை. சீனா போன்ற நாடுகளில் sponge city rainwater system எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் sponge city construction முறையை அமல்படுத்தவும், 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது மிகப்பெரிய திட்டம் இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற திட்டங்கள் அரசின் கொள்கை ரீதியான முடிவு எனக் கூறிய நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion