ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் பண்டிகைளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது விநாயகர் சதர்த்தி. முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகப் பெருமான் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என்று பல பெயர்களும் உண்டு. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வருகின்றனர். இந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் நபர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை அதிகளவு நாடுகின்றனர்.
- தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
பண்டிகை விடுமுறை கால சிறப்பு ரயில்
இந்நிலையில்
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் ( 06153 ) செப்டம்பர் 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் ( 06154 ) செப்டம்பர் 09, 16, 23 ஆகிய திங்கட்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.