மேலும் அறிய
Advertisement
Southern Railway: சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இயக்கப்படும் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு
அதன்படி, தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) நவம்பர் 02, 04, 06, 09, 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) நவம்பர் 03, 05, 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிசம்பர் 1 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
எங்கு எங்கு நின்று செல்லும்
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உடல்நலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion