மேலும் அறிய
சிவாஜி 25வது நினைவு நாள்: மொட்டையடித்து, ஜோதி ஏந்தி ரசிகர்கள் உருக்கமான அஞ்சலி!
சிவாஜி ஏராளமானோர் மொட்டை அடித்து சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவாஜி கணேசன்
Source : whatsapp
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மொட்டையடித்து வழிபாடு நடத்திய சிவாஜி ரசிகர்கள் - ஜோதி ஓட்டத்துடன் வந்த சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த சிவாஜி ரசிகர்.
சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது (10 வயதில்) மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி 49 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக மகுடம் சூடியவர் சிவாஜி கணேசன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற மேடை நாடகத்தில் சிவாஜி என்ற கேரக்டரை வி.சி.கணேசன் ஏற்று நடித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தந்தை பெரியார், வி.சி.கணேசனை “சிவாஜி கணேசன்” என மாற்றினார். 1952ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது.
தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்கள்
திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல ஆளுமைகளை கண்முன்னே நிறுத்தினார். நாயகனாக மட்டுமில்லாமல் தேவர் மகன் , படையப்பா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தனது முதிர்ச்சியை காட்டினார். எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்த ஒரே நபர் சிவாஜி மட்டும் தான். இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு மேயராக கௌரவ பதவி வகித்துள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றிய பல தகவல்கள் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும் தனது வாழ்நாளில் சிவாஜி கணேசன் செய்த நன்கொடைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 வது நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் சிவாஜி ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு நடத்தனர்.
சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஜோதி ஓட்டம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகேயுள்ள சிவாஜிகணேசனின் திருவருவுச்சிலைக்கு ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஜோதி ஓட்டம் நடைபெற்று ரசிகர் ஒருவர் ஜோதியை எடுத்துவந்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சிவாஜி ஏராளமானோர் மொட்டை அடித்து சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















