மேலும் அறிய

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் - செல்லூர் ராஜூ

திமுகவுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயார்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.

அதிமுக சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர் பேசுகையில்,” பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழகத்தில் பெண்களுக்கு சம உரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும். ஒன்றரை லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் சேலை கட்டிய சிங்க பெண்மணி ஜெயலலிதா.

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் - செல்லூர் ராஜூ

தி.மு.கவில்., எம்.ஜி.ஆர் சேர்ந்த பிறகு தான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்.ஜி.ஆர் சுடப்பட்டதால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் தி.மு.கவுக்கு மக்கள் வாக்களித்தனர். சாதாரண நபரான கலைஞரை தலைவராக கொண்டு வந்தது எம்.ஜி.ஆர். தன்னை தி.மு.க தலைவராக்க வேண்டும் என எம்ஜிஆரின் வீட்டில் சந்தித்து பேசியவர் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்தவன் எனக்கூறி மக்களுக்காக உழைப்பேன் எனச்சொல்லி என்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கலைஞர் எம்.ஜி.ஆரிடம் கூறினார். மலைப்பாம்பு போல எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு தி.மு.கவினர் அப்படியே இருப்பார்கள். எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, தனியாக கட்சி தொடங்காமல், வளர்த்த கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் - செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர் போல மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர் இனி வரப்போவதில்லை. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் நன்றாக போஸ் கொடுத்தார்.  குழந்தைக்கு ஊட்டுவது போல ஒரு தகப்பனாக ஒரு தாத்தாவாக என்ன செய்யனுமே செய்தார். ஆனால் கடைசியில் சாப்பாடு உள்ள தட்டில் பிஸ்லரி தண்ணீரில் கை கழுவி விட்டார். குழந்தையின் எச்சில் பட்டதால் கையை கழுவினார். பின்னால் சென்று வேறு எதை வைத்து கை கழுவினார் என தெரியவில்லை. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை கருணாநிதி கேலி கிண்டல் பேசினார்கள். பிள்ளைகளை சாப்பாட்டு பாத்திரத்தை எம்.ஜி.ஆர் தூக்க வைத்து விட்டார் என கேலி பேசினார்கள். எந்தக்கருணாநிதி கிண்டல் செய்தாரோ அதே கருணநிதி சத்துணவில் முட்டை தான் போட்டார். அந்த திட்டத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் - செல்லூர் ராஜூ

உதயநிதி என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலை உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல் ஜல்லி கட்டுமான பொருட்கள் என எல்லாமே விலை கூடி விட்டது. மக்களை தேடி மருத்துவம் என கூறிவிட்டு எந்த மருத்துவரும் வீடி தேடி வரவில்லை. நீட் ரத்து எனக்கூறி இப்போதும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி பணக்காரர்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு  மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். யாருமே திமுக ஆட்சியில் சுபிட்சமாக இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர்கள் இப்போது என்ன பிச்சையா எடுக்கிறார்கள். பொன்முடி, எ.வ.வேலு யார் என எங்களுக்கு தெரியும், ஸ்டாலின், அவர் குடும்பம் அந்த குடும்பத்தின் பின்னணி என்ன, இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது. ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் - செல்லூர் ராஜூ

மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்ச குளிக்கிறார்கள். திமுக தேர்தல் வராது என நினைக்கின்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர்” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget