மேலும் அறிய
“என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள்” பொறுத்தது போதும் பொங்கி எழு - செல்லூர் ராஜூ
என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க பரிச்சாத்த முறையில் தெர்மாகோல் விட்டு ஆய்வு செய்தோம் - செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜூ
மதுரை மாநகராட்சிக் கூட்டம்
மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்கள்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 7 வகையான 201 சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான உரிம கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளன. உரிம கட்டணங்கள் 800 முதல் 40,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட உரிம கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பறவை, விலங்குகள் வளர்க்க 150 ரூபாயும், மாடு வளர்க்க 500 ரூபாயும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும், நாய், பூனை வளர்க்க 750 ரூபாயும் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்ரூத் திட்டத்தின் நிலை என்ன? - செல்லூர் ராஜூ கேள்வி
கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது. மீனாட்சிக்கு 6 மாதம் மட்டுமே ஆட்சி, மேயர் 5 ஆண்டுகள் ஆட்சி புரிகிறார். அம்ரூத் திட்டத்தின் நிலை என்ன? குடிநீர் எப்போது வினியோகம் செய்யப்பட உள்ளது. வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என்னை தெர்மாகோல் என ஓட்டுகிறார்கள், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க பரிச்சாத்த முறையில் தெர்மாகோல் விட்டு ஆய்வு செய்தோம், வைகையாற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்டுப் பெற வேண்டும். வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதால் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது, என பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிலந்திக் கதை.. காலை பிடித்து மேல வந்தவர்கள் - வி.கே.சசிகலா சொன்ன குட்டிக் கதை யாருக்கு !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் ரூ.70 ஆயிரம் லஞ்சத்தை பெற்ற சார்பதிவாளர் - போலீசார் பொறியில் சிக்கியது எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion