மேலும் அறிய

Sellur Raju: கமல் மாதிரி இல்லாமல் விஜய் நன்றாக மிக தெளிவாக பேசினார்- செல்லூர் கே.ராஜூ

திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜயின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை - செல்லூர் ராஜூ கிண்டல்.

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இதனையடுத்து அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.
 
செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "விஜயின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளது. போகப் போக தான் கட்சியின் செயல்பாடுகள் தெரிய வரும். விஜயின் மாநாட்டால் தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர் தொடங்கும் போது கலைஞர் கேலி, கிண்டல் செய்தார், கலைஞர் அ.தி.மு.க.,வுக்கு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல, அ.தி.மு.க., மிகப்பெரிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு இன்னும் காலங்கள் உள்ளன. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.பாரதி மிக கேவலமாக கிண்டல் செய்துள்ளார். விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணி என முடிச்சு போட வேண்டாம். தவெக கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எதற்கு அ.தி.மு.கவில் இருக்க வேண்டும். நாங்களும் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே?, குழந்தை பிறந்து அம்மா என அழைப்பது போல விஜய் மாநாடு நடைபெற்றுள்ளது.
 
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி இருக்காது.

எப்படி இருக்கு என போக போக பார்ப்போம். நடிகர் கமல் மாதிரி இல்லாமல் விஜய் மாநாட்டில் நன்றாக மிக தெளிவாக பேசினார். கமல் கட்சி தொடங்கும்போது டார்ச் லைட் வைத்திருந்தார். இப்போது டார்ச் லைட் மட்டுமே உள்ளது. பேட்டரியை காணோம், விஜய் மாநாட்டில் நல்ல தலைவர்கள் குறித்து தனது தொண்டர்களிடம் பேசியுள்ளார். இதை நாம் வரவேற்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்பதே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பணம் கொடுத்து, விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிம் போது எத்தனையோ புயல்களை தாண்டியும், 25,000 போராட்டங்களை தாண்டியும் மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார்.  திமுகவுக்கு எதிராக அதிமுக செயல்படுவது போல விஜய்யும் செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி கூறும் போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி இருக்காது.
 
குத்துதே!!! குடையுதே!!! என பேசி வருகிறார்கள்

திராவிட மாடல் ஆட்சியை ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ஏமாற்றி விட்டார், திராவிட மாடல் ஆட்சி குறித்து நாங்கள் சொன்னதை தான் விஜய் சொல்கிறார். அ.தி.மு.கவின் குரலாக தான் விஜய் ஒலித்து இருக்கிறார். போகப் போக தான் விஜய் கட்சியின் செயல்பாடுகள் தெரியும். திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை, திமுகவின் இளைஞர் பட்டாளம் விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் குத்துதே!!! குடையுதே!!! என பேசி வருகிறார்கள்" என கூறினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget