மேலும் அறிய
Advertisement
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மதுரையில் காவல்துறை அதிகாரி வீட்டில் நகையும், பணத்தையும் கொள்ளையடித்துத்தார்கள் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு எங்கே இருக்கிறது - ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், “தி.மு.க., மக்களை கரும்புச்சாறு பிழிவதை போன்று கசக்கி எடுத்து சக்கையாக அரசு தூக்கி எரிகிறது. நாடு பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல வறட்சி, கோடை மழை என்று ஒரு புறத்தில் தண்ணீர் பற்றாக்குறை, ஒரு புறத்திலே இன்னைக்கு கோடை மழை எதிர் கொள்ள வேண்டிய இந்த நிர்வாகத்தை மேற்கொண்டு அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியவர்கள் இன்னைக்கு நாடு கடந்து கடல் கடந்து, அவர்கள் செல்வதை பார்க்கிறபோது இந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருக்கிற அக்கறையின் அளவு நமக்குத் தெரிகிறது. கடலை தாண்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளவர்கள் மக்கள் மீது எப்படி அக்கறை கொண்டு இருப்பார்கள் என்பது இதுவே சாட்சி. இந்த நாட்டு மக்களுக்காக, இந்த தமிழ் மண்ணுக்காக இன்றைக்கு ஒவ்வொரு நாளும் உரிமை குரலாக எடப்பாடியார் எடுத்து வைக்கின்ற அந்த வாதங்களை, அந்த கண்டனங்களை, அந்த கோரிக்கைகளை எல்லாம் ஊடகங்கள் உலகத்திற்கு எடுத்துச் சென்றால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு புது வாழ்வைப் பெற்றுத் தர, நல்வாழ்வை பெற்றுத்தர நம்பிக்கை மக்களிடத்தில் பிறக்கும்.
காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை
இன்னைக்கு இந்தியாவிலேயே தமிழகம் கடன் வாங்குவதிலே முதலிடம், தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுபான விலையில் கொள்ளை அடிப்பதிலேயே தமிழகம் முதலிடம். தொழில்துறையில் முதலிடம், வளர்ச்சியில் முதலிடம், என்ற நிலை மாறி இன்றைக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதுரையில் காவல்துறை அதிகாரி இல்லத்திலேயே நகையும் பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள் கோடிக்கு மேல சேர்த்து வைத்த பணத்தை காவல்துறை அதிகாரியே இன்றைக்கு பறிகொடுத்து இருக்கிறார் என்று சொன்னால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு எங்கே இருக்கிறது. எங்கும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது போதை பொருள் கடத்தாத நாள் இல்லை போதை பொருள் நாடாக மாறிவிட்டது. இன்றைக்கு தலைமைச் செயலாளரே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிற ஒரு நிலையை நாம் பார்க்கிறபோது கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழி இல்லை.
காவல்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதில் தோல்வி அடைந்து எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் என்பதை இன்றைக்கு உளவுத்துறை மூலமாக உண்மை செய்தியை தெரிந்து கொண்டு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு இருக்கிற இந்த நேரத்தில் தலைமைச் செயலாளர் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க ஆய்வு கூட்டம் நடத்துவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது இப்போது நாம் இதை நினைத்து கவலைப்படுவதா? கண்ணீர் வடிப்பதா?ஆகவே மக்களின் நம்பிக்கை சிதைத்து இருக்கிற இந்த மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்கு தமிழகத்தில் இருந்து விலகுகிறதோ அன்றைக்கு தான் இந்த தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்பதை இந்த நாட்டு மக்கள் நம்புகிறார்கள். அதற்கு காலம் கனிந்து வர இருக்கிறது ஆகவே புரட்சித்தமிழர் எடப்பாடியார் 70-வது பிறந்த தினவிழாவில் ஊன், உறக்கம் பார்க்காமல் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய சபதம் ஏற்போம்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion