மேலும் அறிய
Advertisement
பாம்பன் பாலத்தில் ஜனவரி 10 வரை ரயில் போக்குவரத்து ரத்து
வரும் ஜனவரி 10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இந்த நிலையில் ரயில்வே பொறியாளர்கள் சென்னை ஐ.ஐ.டி., வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த சில நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
#Railway | ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10- ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
— arunchinna (@arunreporter92) December 30, 2022
Further reports to follow - @abpnadu #TRAIN | @drmmadurai | @LPRABHAKARANPR3 | @SRajaJourno | @pibchennai | @ABPNews pic.twitter.com/A5qOvtUk2Z
மேலும் பயணிகள் இல்லாத காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் ஜனவரி 10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஜனவரி 10ம் தேதி வரை மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pugar petti: பஸ் வசதி இல்லை; எட்டாக் கனியாக மாறும் பெண் கல்வி, சிவகங்கை மாவட்டத்தின் அவல நிலை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion