காதலித்ததால் உதவமறுத்த உறவினர்கள்: 6 மாத கர்ப்பிணி மனைவியுடன், கணவன் தற்கொலை..
6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த தனலட்சுமி - கணவர் நாகராஜ் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடிக்கு உதவி செய்யாமல் இருந்துள்ளனர் அவர்களின் உறவினர்கள். வருமானமின்றி தவித்து இறுதியில் 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகேயிருக்கும் கிளாமரம் கிராமத்தை சார்ந்த நாகராஜ் (27). இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளது.
சாலை அருகே 60 அடி கிணறு... பள்ளத்தில் பார்க் பண்ண டிரைவர்...நொடிப் பொழுதில் தப்பிய பயணிகள்!
பின்னர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தற்போது கர்ப்பிணியான நிலையில், காதல் திருமண ஜோடியை இருதரப்பு பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகராஜுக்கும் உணவகத்தில் சரிவர வேலை இல்லாமல் போயுள்ளது. இதனால் குடும்பம் நடத்த வருமானம் இன்றி சிரமப்பட்டுள்ளனர். வருமானமின்றி சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். காதலித்து மணந்ததால் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.
சென்னை அணியை நேரில் உற்சாகப்படுத்திய முதல்வர் குடும்பத்தினர்... வைரலாகும் போட்டோக்கள்!
இதனைத்தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுக்க, 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த தனலட்சுமி - கணவர் நாகராஜ் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கமுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் செல்கையில், தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தியற்கான தமிழக அரசு ஆணை வெளியீடு