புதுச்சேரி சிறுமி வன்கொலை; உசிலம்பட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக உசிலம்பட்டியில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி துக்கத்தை அனுசரித்தனர்.
அதிர்ச்சி ஏற்படுத்திய அடுத்தடுத்த குற்றங்கள்
சமீபத்தில் பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நிகழ்வுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.
கண்டனங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான சம்பவங்களைத் தவிர்க்க அரசு புதிய சட்டதிட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி துக்கத்தை அனுசரித்தனர்.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்தும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, சிறந்த இளைஞருக்கான தமிழக அரசின் விருது பெற்ற சந்திரலேகா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மற்றும் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் மற்றும் மாணவர்களுக்கு டோன் டச் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
மௌன அஞ்சலி
தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி துக்கத்தை அனுசரித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Yuvan Shankar Raja: புதுச்சேரி சிறுமி மரணம்..வேதனை தெரிவித்த யுவன்..தூக்கிலிட சொன்ன ஜெயம் ரவி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Womens Day : மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்.. மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?