திண்டுக்கல் & பழனியில் நாளை மின் தடை! காரணம் என்ன? உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை புதன்கிழமை (08.10.2025) பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை புதன்கிழமை (08.10.2025) பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், கோட்டைப்பட்டி, பாலா ராஜாக்காப்பட்டி, அணைப்பட்டி, கதிரையின்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுறம், பழக்கணத்து, மில்பீடர் முழுவதும், நரிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, ராமபட்டினம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.





















