pongal 2023: அரசு தரும் பொங்கல் தொகுப்பில் அச்சு வெல்லத்தை சேர்க்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை கொள்முதல் செய்வது போல் அச்சுவெல்லத்தையும் அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கினால் கரும்பு விவசாயிகள், அச்சுவெல்ல உற்பத்தியாளர்களும் பயன் அடைவர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பச்சரிசி பொங்கல், சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றை இறைவனுக்கு படைத்து பொதுமக்கள் வழிபடுவர். இவ்விழாவில் முக்கிய இடம் பிடிக்கும் சர்க்கரை பொங்கலை தித்திக்க செய்வது அச்சுவெல்லம் தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சுவெல்லம் உற்பத்தி நடந்தாலும்,
TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் தயாராகும் அச்சுவெல்லத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு உற்பத்தியாகும் அச்சுவெல்லம் என்பது, ஊரின் மாறாத ஒரு அடையாளமாக உள்ளது. இதற்கு, நெய்க்காரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறுவதே காரணம் ஆகும். அந்த வகையில் நெய்க்காரப்பட்டியை சுற்றியுள்ள கிராம பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.இங்குள்ள தோட்ட பகுதிகளில் ஆலை அமைத்து விவசாயிகள் அச்சுவெல்லம் தயாரித்து அசத்தி வருகின்றனர். பின்னர் அவற்றை சாக்கில் மூட்டையாக கட்டி நெய்க்காரப்பட்டியில் உள்ள ஏல மண்டிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு...நாளை தொடக்கம்...முக்கியத்துவம் என்ன?
பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில், நெய்க்காரப்பட்டி பகுதியில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நெய்க்காரப்பட்டி பகுதியில் பெரும்பாலான கரும்பு தோட்டங்களில் ஆலை அமைக்கப்பட்டு, கரும்பை பிழிந்து சாறு எடுத்து, பின்னர் அவற்றை பெரிய அண்டாக்களில் கொட்டி காய்ச்சு வருகிறார்கள். இதற்கு பெரும்பாலும் கரும்பு சக்கையையே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். பிழிந்த கரும்புசாற்றை சுமார் 2 மணி நேரம் நன்றாக கொதிக்க விடுகின்றனர். சரியான பதத்துக்கு வந்தபின்பு அவற்றை அச்சுகளில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை பெரிய விரிப்புகளில் தட்டி காய வைக்கின்றனர். காய்ந்த பிறகு அவற்றை சாக்குகளில், கட்டி சிப்பமாக (30 கிலோ) மாற்றி மண்டிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
அரியலூரில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிப்பம் ரூ.1,200 வரையில் விற்பனையானது. தற்போது சற்று விலை அதிகமாக ரூ.1,280 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சிப்பத்துக்கு ரூ.1,350 முதல் ரூ.1,400 வரை ஏலம் போனால் மட்டுமே சரியான லாபம் கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை கொள்முதல் செய்வது போல் அச்சுவெல்லத்தையும் அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கினால் கரும்பு விவசாயிகள், அச்சுவெல்ல உற்பத்தியாளர்களும் பயன் அடைவர்.
இதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். நெய்க்காரப்பட்டி வெல்ல மண்டிகளில் புதன், சனி ஆகிய இரு நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில், பொங்கல் பண்டிகை என்றாலே 10 நாட்களுக்கு முன்பு நடைபெறும் ஏலத்துக்கு சுமார் 5 ஆயிரம் சிப்பம் வரை விற்பனைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு அச்சுவெல்லம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் சுமார் 800 சிப்பம் வரையில் மட்டுமே ஏல நாட்களில் சராசரியாக விற்பனைக்கு வருவதாக கூறுகின்றனர் வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்