மேலும் அறிய

pongal 2023: தை பொங்கலுக்கு முதல் நாள் ‘காப்பு கட்டுவது’ ஏன் தெரியுமா..?

தமிழர் திரு நாள் தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டுதலின் சிறப்புகள் என்னென்ன? எதற்கு 'காப்பு கட்டுதல்' திருவிழாவாக கொண்டாடப்பட்டது?

முன்பிருந்த காலங்கள் முதல் தற்போது வரை பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் காப்புக்கட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த காப்புக்கட்டு திருவிழாதான் இப்போ ”போகி” பண்டிகையா மாறி இருக்குறத நாம பார்க்க முடியும். எதுக்கு காப்புக்கட்டு? என்ன காரணம்? இந்த காப்புக்கட்டு நாள் அன்றைக்கு என்ன விசேஷம் அப்படின்னு பாக்குறதுக்கு முன்னாடி பொதுவா பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுவது நம் மண்ணுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கிற ஒரு திருநாளாக இந்த தைப்பொங்கல் பண்டிகைய அதுவும் குறிப்பா தமிழர்கள் மட்டுமே கொண்டாடக்கூடிய ஒரு திருநாளாக இருந்துவருகிறது. இந்த பொங்கல் திரு நாளுக்கு முன் நாள் ”காப்புக்கட்டு” இந்த நிகழ்வு பாரம்பரியமாக தொன்றுதொட்டு வந்த நிலையில், தற்போது காலநிலை மற்றும் கலாச்சாரங்கள் மாற்றத்தினால் பெரிதும் இதைப் பற்றிய வரலாறு தெரியாமலே இருப்பதையும்  நாம பார்க்க முடியும். 

pongal 2023: தை பொங்கலுக்கு முதல் நாள் ‘காப்பு கட்டுவது’ ஏன் தெரியுமா..?

”பொங்கல் கொண்டாடும் இந்த நாளுக்கு, முன் மாதங்கள்ள  மழையின் அளவு அதிகமாக இருந்தும்  பொங்கல் தொடங்கின நாள் அன்றைக்கு மழைக்காலம் தணிந்திருக்குமாம். இதுல குளிர்காலம் ஒரு பகுதியில் இருக்குமாம். இந்த இரண்டும் சேரும் போது உடலில் அதிக உஷ்ணம் சக்திகள் மாறிமாறி வெளியேறி  பெரியம்மை , காலரா போன்ற தொற்று நோய்கள்  உருவாகி இருந்த காலகட்டங்களும் இருந்ததா சொல்லப்படுது.

மழை பெய்யுற நாட்கள்ல ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை காரணமாவும், விஷப்பூச்சிகள் போன்றதுலருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபிள்ளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு கட்டி வீட்டின் முகப்புகள்லயும் தெருக்கள்லயும் தோரணங்களா தொங்கவிடுவாங்க, இதனால் நோய் தாக்கும் பூச்சிகள் வராதுங்கற உண்மையும் இருக்கு.

pongal 2023: தை பொங்கலுக்கு முதல் நாள் ‘காப்பு கட்டுவது’ ஏன் தெரியுமா..?

தை மாத அறுவடை முடிஞ்சு விளைபொருட்கள் வீடு வந்த பின்னாடிதான் கொண்டாடப்படுது பொங்கல் பண்டிகை அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருந்திருக்கு. வீட்ல இருக்க விளைபொருள் கெட்டுப் போகாம பத்திரம இருந்து அந்த வீட்டுக்குப் பயன்படனும் என்பதுக்காகதான் வீட்டுகுள்ள காப்பு கட்டுவதாகவும் சொல்றாங்க தமிழாய்வாளர்கள். ‘விளை நிலங்களும் அதுல விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்யும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கூட பாதுகாப்பா இருக்க வேணும்குற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் கால் நடை தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துருக்காங்க நம் முன்னோர்கள்.

pongal 2023: தை பொங்கலுக்கு முதல் நாள் ‘காப்பு கட்டுவது’ ஏன் தெரியுமா..?

பொங்கல் காப்பு’ பத்தி அகத்திணை உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலேயே சொல்லப்பட்டிருக்கு. ‘விவசாயிக்கும் விவசாயத்துக்கும் பாதுகாப்பு’ன்னு இதைச் சொல்லிக்கலாம். இந்தப் பழக்கமும், இதுக்குச் சொல்லப்படுற காரணமும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்தும் சின்னதா வேறுபடலாம். பிழைப்புக்காக நகர்ப்புறங்களுக்குப் போனவங்ககூட எப்பாடுபட்டாவது பொங்கலுக்கு சொந்த ஊர் வந்துடறாங்க. வசிக்கும் ஊரில் பொங்கல் கொண்டாடுவதை விட, சொந்த ஊரில் இருக்கும் வீடு, நிலங்களுக்குக் காப்புக் கட்டுவதை முக்கியமானதாகக் கருதுகிறவர்களும் இருக்காங்க” என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள் இது போன்று நாம் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருந்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget