மேலும் அறிய
Advertisement
pongal 2022 | திருநங்கைகள் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் - ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கை நெகிழ்ச்சி பேட்டி
”அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” - என்ற வள்ளுவரின் வரிகள் போல தன் மாடுகளுடன் நேசத்தை நிறைத்து கொள்கிறார் திருநங்கை கீர்த்தனா
"முதல் திருநங்கை டாக்டர், முதல் திருநங்கை எழுத்தாளர், முதல் திருநங்கை போலீஸ்" - என திருநங்கைகள் பல்வேறு தலங்களில் கோலோச்சி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பிலும் திருநங்கைகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் திருநங்கை கீர்த்தனா பால் உற்பத்திக்காக பசுமாடுகளையும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளையும் வளர்த்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவை திருநங்கை கீர்த்தனா தன் மாடுகளுடன் பாசத்தை பெறுவதாக நெகிழ்ச்சிபட தெரிவிக்கிறார். மதுரை மதிச்சியம் பகுதியில் வசிக்கும் திருநங்கை கீர்த்தனா சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் உற்பத்தியாளராக இருந்து வருகிறார். மதுரை மேல அண்ணா தோப்பு பகுதியில் தன் கால்நடைகளை பராமரிக்கிறார். சக திருநங்கைகளின் உதவியோடு இவர் சுயதொழிலில் ஈடுபடுகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தில் சமூக சேவையிலும் ஈடுபடுவது கூடுதல் சிறப்பு. இவர் தனது முரட்டுக் காளையை குழந்தை போல் வளர்ப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், கலிங்கப்பட்டி என எல்லா வாடிவாசலிலும் தன் காளையை அவிழ்க்கிறார்.
வெங்கல குரலில் கீர்த்தனா நம்மிடம்...," பெரிய முத்தையா, சின்ன முத்தையா, கருடன், நரசிம்மன், ருத்ரன் - இவங்கி பூரா என் பசங்க. சல்லியட்டுக்கு இவிங்கல வளக்குறேன். பிச்சையம்மா, லெட்சுமி இதுகள பாலுக்காக வளக்குறேன். இருக்குறதுலையே ருத்ரன் தான் சேட்டக்காரன். அவன்ட மூக்கணாங்கயிறு இல்லாம நானே கிட்ட போகமாட்டேன். மித்தவிங்க எல்லாம் அப்படி இல்ல சமத்து. என்ன குடுத்தாலும் சாப்பிடுவாங்க. என் பசங்க பல இடத்துல பரிசு எடுத்தாருவாங்க. பெரிய முத்தையா, சின்ன கட்டளை சல்லியட்டுல பைக்கே பரிசு வாங்கிக் கொடுத்துருக்கான். மித்தபடி கட்டுலு பீரோ, அண்டானு ஏகப்பட்ட பரிசு எங்கிட்ட இருக்கு. ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு எனக்கு மிகப்பெரும் மரியாதைய ஏற்படுத்தி கொடுத்திருக்கு. என்ன மாதிரியான திருநங்கை அலங்காநல்லூர் சிந்தாமணி, மணப்பாறை விஜினு ஏகப்பட்ட பேரு ஜல்லிக்கட்டு மாடு வளக்குறாங்க. திருநங்கைகள் எல்லா இடங்களிலும் நிரம்பி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார் நம்பிக்கையாக.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவனங்களை மட்டும் கொடுக்காமல் அதனுடன் பாசத்தையும், வீரத்தையும் ஊட்டு வளர்க்கிறார் கீர்த்தனா. ”அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” - என்ற வள்ளுவரின் வரிகள் போல தன் மாடுகளுடன் நேசத்தை நிறைத்து கொள்கிறார் திருநங்கை கீர்த்தனா.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
க்ரைம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion