தேனி: செல்போன், வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்
இரவில் தனியாக சென்ற நபர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட4 இளைஞர்களை விரட்டி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு அவ்வப்பொழுது நடைபெற்று வந்தது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் பஷீர் அகமது, என்ற இரண்டு இளைஞர்களும் மதுபோதையில் வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த சடையாண்டி என்பவரை இருவரும் சேர்ந்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
PM Modi Speech: கிராமத்தின் ஆன்மா..நகரத்தின் வசதி...தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..
அப்பொழுது அந்த வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சம்பவத்தை பார்த்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை இருவரையும் பிடிக்கச் சென்றனர். அப்போது தப்பி ஓடிய நிலையில் விரட்டி மடக்கிப் பிடித்தனர். அதே நேரத்தில் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மரியபால் தினகரன் மற்றும் ஜோசப் கார்த்திக் என்ற இரண்டு இளைஞர்களும் சேர்ந்து வடகரை அரண்மனை தெரு பகுதியில் வீட்டிற்குச் சென்ற மாரிச்செல்வம் என்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மேலும் ரோந்து பணியில் வந்த காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடிய நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் நான்கு பேரும் சேர்ந்து இருவர் இருவராக பிரிந்து வழிப்பறியில் ஈடுபடும் நண்பர்கள் என தெரிய வந்ததுள்ளது. இரவில் தனியாக வந்த நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று இரவு ஒரு மணி நேரத்தில் மூன்று வழிப்பறி சம்பவங்களை 4 இளைஞர்களும் செய்துள்ளதாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்