Rain Red Alert: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
![Rain Red Alert: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எந்த மாவட்டங்கள் தெரியுமா? Red Alert Issued for 5 districts Tamil Nadu Next 24 hours Heavy Rain Expected Mayiladuthurai Thanjavur Tiruvarur Nagai Cuddalore Rain Red Alert: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/1243eec83e367dfcef44065a0351350f1668161085762571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டிலுள்ள 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்:
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகன மழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 11, 2022
வானிலை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்துக்கு, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னனுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் கடலூர், பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பதார், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தார், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை வானிலை நிலவரம்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Tamil Nadu Rain News Today LIVE: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)