மேலும் அறிய
Madurai: மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை! இன்று விருப்பமனு அளிக்கலாம்! விவரம்!
பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை மே 6 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.

சுங்குடிச் சேலை
மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்கடி சேலைகளை மீண்டும் "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக தகுதியுள்ள தயாரிப்பாளர்களிடமிருந்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக பிரிவு விருப்பமனு கோரியுள்ளது.

கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு அளிக்க தகுதி பெற்றவராவார். விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்கடி சேலைகளை மீண்டும் "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.#sarees | #sungadisarees | #madurai | #handloom | #TRAIN | @drmmadurai | @Vanni_Radha | @thangadurai887 #abpnadu pic.twitter.com/jXrD0vRIN9
— Arunchinna (@iamarunchinna) May 5, 2022

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Railway: கொரோனாவிற்கு பிறகு மீண்டும் ரயில்நிலையங்களில் நின்று செல்லும் ரயில்கள்... மே 6 முதல் ஆரம்பம்
பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அன்று மாலை 03.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். தேர்வு பெற்ற நிறுவனத்திற்கு மதுரை ரயில் நிலையத்தில் மின்சார வசதியுடன் கூடிய பயணிகள் பார்வையில் படும் இடம் 15 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு என்ற 9003862967 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு - பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















