மேலும் அறிய
Advertisement
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசு ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி மனு தாக்கல்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசு ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஜனவரி 10ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், மாடு வளர்ப்போர் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு கூடங்கள் போன்றவை 50% நபர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வழிபாட்டுத்தலங்கள் செயல்படாது. 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி 200 கோடிக்கு அதிகமாக மது விற்பனையானது நடைபெற்றுள்ளது.
எனவே, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றால் தொற்று அதிகம் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அத்தியாவசியம் இல்லாமல் இருக்கும் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், போன்றவைகள் செயல்படுவதன் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழா நாட்கள் என்பதால் மது விற்பனை அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளது இதன் மூலமும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் மேலும் இந்த அரசாணையில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழாக்காலங்களில் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்ததை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion