மேலும் அறிய

ஆடி அமாவாசை: திதி தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

சுருளி அருவியில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடையானது நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம்.


ஆடி அமாவாசை: திதி தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் இந்த வருடம் ஆடி மாதத்தில் அமாவாசை  நாளான இன்று புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி , தர்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.


ஆடி அமாவாசை: திதி தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூத நாராயணன் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களாக சுருளி அருவியில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடையானது நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அதே போல சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றிலும்  குளித்து பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.


ஆடி அமாவாசை: திதி தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

இதே போல் பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து  தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்

பெரியகுளம் பகுதியில் உள்ள அருள் மிகு பாலசுப்ரணிய திருக்கோவில் வராக நதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருகரைகளிலும் எதிர் எதிரே ஆண், பெண் மருத மரங்கள் உள்ளதால் இறந்த முன்னோர்களுக்கு வருடந்தோரும் திதி மற்றும் தர்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம். 


ஆடி அமாவாசை: திதி தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

இந்நிலையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் அருகே உள்ள வராக  நதி ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி தேன் பால் பச்சரிசி வாழைப்பழம் எல் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து  தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு பிண்டத்தை வராக நதி ஆற்றங்கரையில் கரைத்து தனது முன்னோர்களை வழிபட்டனர்இந்நிகழ்வில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget