தேனியில் கொட்டும் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கடந்த ஒரு மாதங்களாக சுட்டெரித்துக்கொண்டிருந்த கோடை வெயில் குறைந்து கோடை மழை பெய்யத்துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனியில் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்துக்கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக கோடை மழை பெய்யத்துவங்கியது. தேனி மற்றும் பல்வேறு இடங்களில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பகல் 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. 10 நிமிடம் மட்டுமே இந்த சாரல் மழை நீடித்தது. பின்னர் வானில் கார் மேகம் சூழ்ந்து, மாலை 3 மணி அளவில் சூறாவளி காற்று வீசியது.
சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. கொட்டித்தீர்த்த கோடை மழையால் தேனி நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால் பலத்த காற்று வீசியபோது தேனி-போடி சாலையில் இருந்த நூற்றாண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து, அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்தது. இதில் அந்த காரை ஓட்டிச்சென்ற தேனி ரத்தினம்நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 58) என்பவர் காயம் அடைந்தார்.
கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் இருந்து வெளியே வர முடியாமல் ராஜ்குமார் தவித்தார்.மரம் விழுந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த மக்களே மரத்தின் கிளைகளை வெட்டி, காருக்குள் இருந்த ராஜ்குமாரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மரத்தின் கிளைகளை வெட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?
சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.மேலும் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், சின்னமனூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழையும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. கடந்த ஒரு மாதங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்துக்கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவிவருகிறது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்