மேலும் அறிய

பரமக்குடி, மானாமதுரை: அனுமதிக்கப்படாத பாதையில் கிராவல் லாரிகள்; கிராம மக்கள் கொந்தளிப்பு!

சிவகங்கை மாவட்ட வழித்தடத்தில் கிராவல் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட பாதையை புறக்கணித்து கிராவல் லாரிகள் இயக்கம்; தூசி மாசு, விபத்து அபாயம் அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார்.

கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் பகுதியில் கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுள்ளவர்கள், அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடத்தை பயன்படுத்தாமல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கோச்சடை கிராமம் அருகே உள்ள அய்யனார்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக லாரிகளை இயக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வழித்தடத்தில் தினமும் 30 முதல் 50 கிராவல் லாரிகள் வரை சென்று வருவதால், அப்பகுதியில் கடும் தூசி மாசு ஏற்பட்டு வருகிறது. மானாமதுரை – பரமக்குடி – இளையான்குடி இணைப்புச் சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

கிராவல் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை 

மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து கிராவல் மற்றும் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தூசி மற்றும் கற்கள் காரணமாக விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் மாவட்ட எல்லை தொடர்புடையது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், சிவகங்கை மாவட்ட வழித்தடத்தில் கிராவல் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும்

இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த   பொதுமக்கள் இன்று அந்த வழியாக வந்த சில கிராவல் லாரிகளை நிறுத்தினர் இதனால் பரபரப்பு நிலவு எது அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே லாரிகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.“அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பை உறுதி செய்து, விபத்து அபாயத்தை குறைக்கும் வகையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget