மேலும் அறிய

பழனி தைப்பூச திருவிழா: முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்!

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”அரோகரா அரோகரா” என்ற கோசமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.பழனி தைப்பூசத் திருவிழாவின்  ஆறாம் நாளான   நேற்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக வெள்ளித்தேரில் எழுந்தருளினார்.

பழனி தைப்பூச திருவிழா: முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்!

தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்‌. இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர்.  வள்ளி, தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து,  அரசு அதிகாரிகள், பழனிநகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகிற பிப்ரவரி 4ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி தைப்பூச திருவிழா: முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்!

தைப்பூசத்திருவிழாவிற்காக  நேற்று சனிக்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் குவிந்தனா். இந்த முறை சிறப்பு ஏற்பாடாக பக்தா்களுக்காக கிரிவீதியில் மேற்கூரைகள், தடுப்புகள், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டன. அழகுநாச்சியம்மன் கோயில் முன் தொடங்கிய பக்தா்களின் வரிசை குடமுழுக்கு நினைவரங்கு வரை நீண்டிருந்தது. பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுமாா் 20 அடி நீள சூலாயுதத்தை அலகு குத்தி வந்தார் முருக பக்தா். சுமாா் 8 இடங்களில் அவசரக் கதவுகள் அமைக்கப்பட்டன. பாத யாத்திரை பக்தா்கள் மயில், பால் காவடிகளை எடுத்து ஆடிப்பாடி வந்தனா். பக்தா்கள் பலா் 10 அடி முதல் 20 அடி வரையில் அலகுகள் குத்தி கிரிவலம் வந்து மலையேறினா். பாதவிநாயகா் கோயில் முதல் அழகுநாச்சியம்மன் கோயில் வரை 5 வழிகளில் பக்தா்கள் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

பழனி தைப்பூச திருவிழா: முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்!

இதனிடையே, பழனிக்கு வரும் பேருந்துகள் நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், பக்தா்கள் நகருக்குள் வந்து செல்ல வசதியாக கோயில் சாா்பில் ஏராளமான இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் பக்தா்கள் அடிவாரம், கொடைக்கானல் சாலை, இடும்பன் கோயில், சிவகிரிப்பட்டி, பழனியாண்டவா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொண்டனா். பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தா்களுக்கு போலீஸாா் வழிகாட்டி வருகின்றனா். தவிர, பக்தா்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆா் கோடுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget