Palani Temple: தைப்பூச திருவிழா கொண்டாட்டம்! பழனி முருகன் கோயில் உண்டியல் இவ்வளவா?
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா உண்டியல் காணிக்கை வரவாக இரண்டு நாட்கள் எண்ணப்பட்டதில் ரூ. 5 .கோடியே 39 லட்சம் இருந்தது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா, கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.
தைப்பூசம்:
அதனை தொடர்ந்து தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம்நாள் திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான தெப்பதேர் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!
பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!
தொடர்ந்து அன்று இரவு நிறைவடைந்தது. தைப்பூச விழாவில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து இரண்டு நாட்கள் எண்ணப்பட்டது. எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 5 கோடியே 39 லட்சத்து 72,368 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?
தங்கம் 680 கிராமும், வெள்ளி 25102 கிராமும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 854 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் குழு பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.