மேலும் அறிய

பழனி : பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் திருத் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் தைபூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றுது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்.  பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற்றது.

பழனி : பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..

இந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி எடுத்தும் ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடினர். 

பழனி : பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாணமும்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்  நடைபெற்றது. இன்று மாலை 4.45மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பழனி : பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..

தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கிரிவீதிகளில் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.

பழனி : பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்.. குவிந்த பக்தர்கள்..
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் ஒரே சமயத்தில் பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி, மலைக்கோவில் மற்றும் பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget