மேலும் அறிய

அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

உலக முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பழனியில் நடைபெறவிருக்கிற உலக முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடுத்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டிற்கு ஏராளமான முருக பக்தர்கள், ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள், தமிழ் அறிஞர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.

அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனிக்கு வருகை தந்தார். அதிகாலையில் பழனி மலை கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாநாட்டிற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது,  பழனியில் நடைபெறவுள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும்,

அடுத்த மாதம் 2 நாட்கள் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்

மாநாட்டில் பிரதானமாக எட்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதில் அறுபடை வீடு முருகன் மற்றும் மருதமலை முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் சிறப்பு அலங்கார வளைவுகள்,  முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் திரையரங்கு, வி.ஆர் தொழில்நுட்பத் திரையரங்கு, அறுபடை வீடுகளின் முருகன் திருக்கோவில்களின் தத்ரூபமாக அமைக்கப்பட்ட முருகன் சிலைகள், 12 சித்தர் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு பந்தல் உணவு பந்தல் கழிப்பார்கள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் போது உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும்,  மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பழனி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, காவல்துறை மாவட்ட எஸ்பி பிரதீப் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget