மேலும் அறிய

Palani Temple: மின் இழுவை ரயிலில் ஏற்றாத ஊழியர்கள்; படிப்பாதையில் தவழ்ந்து வந்த முதியவர் - பழனி கோயிலில் சோகம்

வயதான பக்தரை ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பழனி முருகன் கோயிலுக்கு வந்த  வயதான முதியவரை மின் இழுவை ரயிலில் ஏற்றாதால், படிப்பாதை வழியில் தவழ்ந்து தவழ்ந்து வந்த காட்சி பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்கிற 85 வயதான பக்தர் மகள், பேரன், பேத்தியுடன் வந்திருந்தார். பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக ரோப்கார் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது நேரம் முடிந்து விட்டது என்று கூறியதால், மின்இழுவை ரயில் ஏற சென்றபோது ஏற்ற மறுத்தனர். அவருடன் வந்த குடும்பத்தினர் தங்களை ஏற்றிக்கொள்ள வேண்டாம், உடல்நலம் சரியில்லாத முதியவரை மட்டுமாவது மின்இழுவை ரயிலில் ஏற்றி கொள்ளுமாறு கெஞ்சி கேட்டும் மறுத்தனர்.

Palani Temple: மின் இழுவை ரயிலில் ஏற்றாத ஊழியர்கள்;  படிப்பாதையில் தவழ்ந்து வந்த முதியவர் - பழனி கோயிலில்  சோகம்

இதனால் படி வழிப்பாதையில் இறங்கினார். அப்போது அவரால் முழுமையாக நடக்கமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து நடக்கமுடியாமல் அவர் தவழ்ந்தபடியே படியில் இறங்கியதை பார்த்த பக்தர்கள் கீழே இருந்த செக்யூரிட்டிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற முதியவரை பாதுகாப்பாக இறக்கிய போது, அவரால் முடியாமல் போனது. பின்னர் அங்கிருந்து மரநாற்காலி மூலம் தூக்கி வந்து காரில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Palani Temple: மின் இழுவை ரயிலில் ஏற்றாத ஊழியர்கள்;  படிப்பாதையில் தவழ்ந்து வந்த முதியவர் - பழனி கோயிலில்  சோகம்

வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்கு பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  உடனடியாக உடல்நலம் இல்லாத வயதான பக்தரை ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றில் வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Embed widget