மூணாரில் உலா வந்த படையப்பா யானையால் பரபரப்பு - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!
மூணார் நகரில் தொடர்ச்சியாக படையப்பா யானை உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தை சேர்ந்த அரிக்கொம்பன் எனும் காட்டு யானை தமிழக வனப்பகுதி வழியாக நுழைந்து தேனி மாவட்டம் கம்பம் அருகே தஞ்சம் அடைந்தது. யாரும் எதிர்பாராத நிலையில் ஊருக்குள் நுழைந்த அரிக்கொம்பன் காட்டு யானையை பல்வேறு போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் காட்டு யானையை பிடித்து நெல்லை மாவட்ட வனப்பகுதிக்குள் விட்டனர்.
கேரள மாநிலம் மூணார் எஃகோ பாயின்ட் என்ற இடம் எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் நிறைந்த இடமாகும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே இப்பகுதியில் படையப்பா எனும் காட்டு யானை தொடர்ச்சியாக உலா வருகிறது. மேலும் சாலையோர கடைகளை சேதப்படுத்தியதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் திண்பண்டங்களை திண்றது. தொடர்ந்து வியாபார கடை ஒன்றின் ஷட்டரையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனிடையே படையப்பா யானை சாலையின் நடுவே முகாமிட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சில சுற்றுலா பயணிகள் படையப்பா யானையை கோவமூட்டும் செயலில் ஈடுபட்டனர். இதனால் படையப்பா யானை சற்று ஆக்ரோஷமானது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவிடம் சென்ற வனத்துறையினர் படையப்பா யானையை வனபகுதிகள் விரட்டினர்மூணார் இதே போல நேற்று எஃகே பாயிண்ட் அருகே திடிரென படையப்பா யானை உலா வந்ததது.
இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டிருந்த பைனாப்பில் உட்பட சில பழங்கள் மற்றும் திண்பன்டங்களை தின்று தீர்த்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் படையப்பா யானை கோவமூட்டினர். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அவர்களை கண்டித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் உலா வந்த படையப்பா யானை பின்னர் அமைதியாக வனப்பகுதிக்குள் கடந்து சென்றது